உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:எட்டியலூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், எட்டியலூர், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


ஊர்  : எட்டியலூர் ஊராட்சி  : வடகண்டம் மாவட்டம்  : திருவாரூர் தொழில்  : விவசாயம்

எட்டியலூர்[தொகு]

எட்டியலூர் உமா மகேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : உமா மகேஸ்வரர்

அம்மன் : உமா மகேஸ்வரி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : சிவக்குளத்து தீர்த்தம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர் : எட்டியலூர்

மாவட்டம் : திருவாரூர்

மாநிலம் : தமிழ்நாடு


திருவிழா:

     

  பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி  

     

தல சிறப்பு:

     

  இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

     

திறக்கும் நேரம்:

     

  காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.  

     

முகவரி:

     

  அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் எட்டியலூர், திருக்கண்ணமங்கை அஞ்சல், குடவாசல் தாலுகா, திருவாரூர்-610104.  

     


     

 

     

பொது தகவல்:

     

  இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பு மண்டபத்தில் விநாயகர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்கை, பிரம்மா, பைரவர், நவக்கிரகம் பலிபீடம், நந்தி ஆகியோர்அருள்பாலிக்கிறார்கள். கர்ப்பக்கிரகத்தில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

     


பிரார்த்தனை

     

  திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும், செல்வ வளம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.  

     

நேர்த்திக்கடன்:

     

  தாலிக்கயிறு, வளையல், மஞ்சள் புத்தாடை அம்மனுக்கு படைத்து சுமங்கலிக்கு கொடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.  

     

தலபெருமை:

     

  திருவாரூர் தியாகராஜர் கோயில் எட்டிய தொலைவில் உள்ளதால் எட்டியலூர் என்றும்,  இப்பகுதியில் தானியங்கள் மற்றும் மலர்கள் எட்டுவகையானது உற்பத்தி செய்து தியாகராஜர் கோயிலுக்கு அனுப்பியதால் எட்டு இயல்புகளையுடைதால்  எட்டியலூர் என மறுவிய தாகவும் கூறப்படுகிறது. சோழ மன்னன், அவர் மண்டலத்தில் 108 கோயில்கள் கட்டியதில் இந்த கோயிலும் ஒன்று.  

     

தல வரலாறு:

     

  சோழ மன்னர் அவர் மண்டலத்தில் 108 கோயில் கட்டியதில் இப்பகுதியில் உமா மகேஸ்வரி உடனுறை உமா மகேஸ்வரர் திருக்கோயில் அமைந்தது சிறப்பு. மேலும் இப்பகுதியில் காசியிலிருந்து பிரதிஷ்டை செய்த விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயிலும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இக்கோயில் நாளடைவில் பராமரிப்பில்லாமல் சிதலமடைந்துவிட்டது. அச்சமயம் இவ்வூரில் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது ஒரு தலையாறி கனவில் இறைவன் தோன்றி மூன்று சுமங்கலி பெண்களை தண்ணீர் கொண்டு வந்து என் திருமேனியை சுத்தம் செய்து, மிளகாய் சாந்து அறைத்து தடவி வழிபாடு நடத்தினால் கட்டாயம் மழை வரும் பஞ்சம் தீரும் என்று கூறினார். இதை தலையாறி ஊர் பெரியவரிடம் கூறினார். அதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில தினங்கள் கடந்த பின் தலையாறி கூறியதை நிறைவேற்றினார்கள். உடனே மழை பெய்து அப்பகுதி செழிப்பானது. அதன்பின் காட்டில் மறைந்து கிடந்த சிவலிங்கம் உள்ளிட்ட பல விக்கரஹங்களை பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள்.


சிறப்பம்சம்:

     

  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருவாரூர்- கும்பகோணம் சாலையில் 10 கி.மீ., தொலைவில் எட்டியலூர் உள்ளது. வெட்டாற்றுப்பாலம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி உள்ளே 2 கி.மீ. சென்றால்  கோயில் உள்ளது. எட்டியலூர் திருவாரூர் (பேச்சு) 10:54, 5 மே 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:எட்டியலூர்&oldid=3949233" இலிருந்து மீள்விக்கப்பட்டது