பயனர்:VallarasuS/மனிதரளவையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபகரணங்கள் மற்றும் பணியிடங்களுடனான மனித தொடர்புகளை மேம்படுத்த பணிச்சூழலியல் துறையானது மனிதரளவையியல் பயன்படுத்துகிறது.

மனிதரளவையியல் (கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது ) என்பது தனி மனிதனின் உடல்சார் அளவீட்டைக் குறிக்கிறது. இது உடல்சார் மானுடவியலில் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவீடு.

மனித உடல் அளவீடுகளில்  உள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ளவும் அடையாளம்  காணவும், மேலும் அவை எவ்வாறு உடல், இன மற்றும் உளவியல் பண்புகளுடன் தொடர்புடையன எனும் பல்வேறு முயற்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மனிதரளவையியல் என்பது மனித உடலின் இயற் பண்புகளை, முக்கியமாக உடல் அளவு மற்றும் வடிவத்தினை முறையாக அளவிடுவதை உள்ளடக்கியது. மனித வாழ்க்கைத் தரம் குறித்த ஆய்வுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அணுகுமுறைகள் போதுமானதாக இல்லை என்பதால், வரலாற்றாசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் மனிதரளவையியல் வரலாறு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. [1]

உற்பத்திப் பொருள் வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, பணிச்சூழலியல் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றில் மனிதரளவையியல் இன்று ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, மக்கள்தொகையில் உடல் பரிமாணங்களின் பகிர்மானம் குறித்த புள்ளிவிவர தரவு, பொருட் தயாரிப்புகளை மேம்படுத்த பயன்படுகிறது. வாழ்க்கை முறைகள், உணவு மற்றும் மக்கள்தொகையின் இன அமைப்பு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் உடல் பரிமாணங்களின் பகிர்மானத்தில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் (எ.கா. உடல் பருமன் அதிகரிப்பு ) இதனால் மனிதரளவையியல் தரவு சேகரிப்புகளை தொடர்ந்து புதுப்பித்தல் தேவைப்படுகிறது.

1893 இல் பெர்டிலனின் ஆய்வகத்திற்கு பிரான்சிஸ் கால்டன் வருகை தந்தபொழுது எடுக்கப்பட்ட பெர்டிலன் பதிவு

தன் வரலாற்றில் அறிவியலின் பல பிரிவுகலில் பரந்து விரவியிருக்கிறது. உதாரணமாக தடய அறிவியல், தொல்மானிடவியல், உடல்சார் மானிடவியல் மேலும் பல.

[[பகுப்பு:இனவாதம்]] [[பகுப்பு:உடலியங்கியல்]] [[பகுப்பு:மருத்துவப் படிமவியல்]] [[பகுப்பு:அளவியல்]] [[பகுப்பு:மனித உடல்]] [[பகுப்பு:மாந்தரின உடற்கூற்றியல்]] [[பகுப்பு:உயிரியளவியல்]]

  1. Baten, Joerg; Komlos, John (2004). "Looking Backward and Looking Forward: Anthropometric Research and the Development of Social Science History". Social Science History 28: 191–210. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:VallarasuS/மனிதரளவையியல்&oldid=2975891" இலிருந்து மீள்விக்கப்பட்டது