உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE PARTHI DIET ARY/மணல்தொட்டி/5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துல்லியக் கற்பித்தல்

துல்லியக் கற்பித்தல் என்பது துல்லியமாகவும்,முறையாகவும்,கலைத்திட்டத்தையும் மற்றும் அறிவுரை செயல்களையும் மதிப்பீடு செய்வதாகும். நடத்தை அளவை பகுப்பாய்வு முறைகளில் ஒன்றான இது நடத்தை பகுப்பாய்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. அறிவியல் அளவை முறையை அடிப்படையாக கொண்ட இந்த முறை 1960 களில் ஆக்டான் லின்ஸ்லீ என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டதாகும். இது ஸ்கின்னரின் செயல்படு ஆக்கநிலையிருத்தத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. துல்லியக் கற்பித்தல் என்பது கற்றல் திட்டத்தின் ஒரு வகையாகும், நிகழ்வெண் தரவுகளை அடிப்படையாக கொண்டது. கலைத்திட்டத்தை கற்போருகேற்றவாறு பெருமமாக்கவும், கருத்தை சரளமாக கற்போர் அறிந்து கொள்ளவும், அளவிடவும் பயனாகிறது. உதாரணமாக துல்லிய கற்பித்தல் நேரடி அறிவுரை வழங்குதலுடன் தொடர்புடையதாகும். இளம் வயது குழந்தைகள் திறன் அளவீட்டை பட்டியலிட்டு பின்னர் துல்லிய கற்பித்தல் மூலம் அவர்களது கற்றலை

மேம்படுத்துகின்றனர். ஓவன் ஒயிட் என்பவரின் கருத்துப்படி 'துல்லியக் கற்பித்தல் என்பது தீவிர ஊனமுற்றவர்கள் முதல் பல்கலைக்கழகநிலை வரையுள்ள மாணவருக்கும், சிறியக்குழந்தை முதல் வயதானவரை உள்ளவருக்கும் பயனாகிறது.

மேற்கோள்[தொகு]

                https://en.wikipedia.org/wiki/Precision_teaching'