பயனர்:TNSC RAJESWARI NIL/ஆதாம் செயற்கை நீரூற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Night time view of Adam's fountain
ஆதாமின் நீரூற்றின் இரவு நேரத் தோற்றம்

ஆதாமின் நீரூற்று  ஊட்டியிலுள்ள சேரிங் கிராஸ் பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒரு பொது காட்சி நீரூற்று. அது 1886 ம் ஆண்டு தன்னுடைய பதவிக்காலத்தில் அந்தப்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த ஊட்டி ஆளுநரின்[1] நினைவாகக் கட்டப்பட்டது.[2] இதன் மொத்த செலவுத் தொகையான ரூ. 13,000 லிருந்து ரூ. 14000 பொது நிதியுதவி மூலம் செய்யப்பட்டது.[3]

வரலாறு[தொகு]

Adam's fountain
ஆதாம் செயற்கை நீரூற்று
Night time view of Adam's fountain
ஆதாம் செயற்கை நீரூற்றின் இரவு நேரத் தோற்றம்

இந்த நீரூற்று முதலில் ஊட்டி சந்தை அருகே நிறுவவே முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது பின்னர் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் வைப்பதே சரியாக இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது. நீரூற்று கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அங்கு நீரூற்று ஒழுங்காக செயல்பட போதுமான தண்ணீர் வசதி இல்லாதது அறியப்பட்டது. இறுதியாக 1898 ம் ஆண்டு நீரூற்று தற்போது அமைந்துள்ள பகுதியான சேரிங் கிராசிற்கு மாற்றப்பட்டது. இந்த நீரூற்று நிறுவப்படுவதற்காக சேரிங் கிராஸில் அப்போது அங்கு ஒரு எல்லைக்குறிப்பாக இருந்த பழைய மெலனோசைலான் மரம் அகற்றப்பட்டது. 

சுற்றுலாத் தளம்[தொகு]

இந்த நீரூற்று ஊட்டியின் மிக முக்கியமான [4] மற்றும் அழகான இடங்களில்[5]  ஒன்றில் அமைந்துள்ளதால், இது ஊட்டியின் ஒரு முக்கியமான சுற்றுலாத்தள எல்லையாகும்.[6]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "World Travel Destinations - Adam’s Fountain". traveldest.org. பார்த்த நாள் Sep 9, 2011.
  2. "Raj Bhavan". ootyhotels.org. பார்த்த நாள் Sep 9, 2011.
  3. "OOTY / UDHAGAI / UDHAGAMANDALAM / OOTACAMUND - ADAM'S FOUNTAIN". nilgiris.tn.gov.in. மூல முகவரியிலிருந்து 2011-01-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் Sep 9, 2011.
  4. "NILGIRIS DISTRICT - EXTRACT OF RULE 4(1)(b) OF THE RIGHT TO INFORMATION ACT 2005.". tnpolice.gov.in. மூல முகவரியிலிருந்து 2011-08-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் Aug 11, 2011.
  5. Swaminathan, K.P. (Jul 14, 2008). "Nilgiris ruined". தி இந்து. http://www.hindu.com/2008/07/14/stories/2008071458170300.htm. பார்த்த நாள்: Aug 11, 2011.
     
  6. "The Hindu Images". thehinduimages.com. பார்த்த நாள் Sep 9, 2011.

[[பகுப்பு:உதகமண்டலம்]]