பயனர்:Subramanian A/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தருமபுரி.[தொகு]

        1857-ஆம் ஆண்டு தெலுங்கு ஆரம்பப்பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி 1884-ல் நடுநிலைப்பள்ளியாகவும் 1917-ல் உயர்நிலைப்பள்ளியாகவும் 1978-ல் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு கல்விப் பணியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த சேவையாற்றி வருகிறது. 
        தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் பெயரைத் தாங்கி சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதியமானை சிறப்பிக்கும் வகையில் அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய காட்சியைக் காட்டும் தற்காலச் சிலை பள்ளி வளாகத்துள் நிருவப்பட்டுள்ளது.
        படிப்பு, பண்பாடு, பயனுள்ள வாழ்க்கை என்பதே இப்பள்ளியின் தாரக மந்திரமாக கொண்டு செயலாற்றிவருகிறது.
        இப்பள்ளி தருமபுரி மாவட்டத்தின் மையப்பகுதியில் உள்ளது. சிறந்த வகுப்பறைகள், நூலகம், அறிவியல் ஆய்வகம், கணினி அறை, பயிற்சி பட்டறைகள், LCD அரங்கம், விளையாட்டு மைதானம், உயரமான நுழைவாயில் போன்றவை இப்பள்ளியின் சிறப்பம்சமாகும். மகுடத்திற்கு வைரமும் மாணிக்க கற்களும் சிறப்பு சேர்ப்பது போல தலைமையாசிரியரும் ஆசிரியர்களும் இப்பள்ளிக்கு சிறப்பு சேர்ப்பித்துவருகின்றனர்.    
       2007-ஆம் ஆண்டு 150-ம் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள், தலைமையரிசியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் விழாவினை சிறப்பாக கொண்டாடி  150-ஆவது ஆண்டு விழா மலர் வெளியிட்டனர்.
இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சமுதாயத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு சேவையாற்றி வருகின்றனர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Subramanian_A/மணல்தொட்டி&oldid=2263131" இலிருந்து மீள்விக்கப்பட்டது