பயனர்:Subhash~tawiki/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆகும்பே முன்னுரை: ஆகும்பே, ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது மலைநாடு பகுதியில் உள்ளது. இது “தென் இந்தியாவின் சிரபுஞ்சி” என அழைக்கபடுகிறது. இந்த பகுதிகளில் நக்சல் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இடம்: ஆகும்பே, மேற்கு கடற்கரை பிராந்தியத்தில், பெங்களூர்வில் இருந்து சுமார் 357 km தொலைவில் உள்ளது. அரேபிய கடற்கரயில் இருந்து 55வது கி.மீ. யில் உள்ளது. இது உடுப்பி கரையோரம் இருக்கிறது. ஆகும்பே வில் இருந்து அருகிய விமான நிலையம் மங்களூரிலும் அருகிய ரயில் நிலையம் உடுப்பியிலும் உள்ளது. அளவு: ஆகும்பே, குறைந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ஒரு சிறு கிராமம் ஆகும். அகும்பேவின் மக்கள் தொகை 500 ஆகும். இந்த கிராமம் சுமார் 3 சதுர கி.மீ. அளவை கொண்டது. பொருளாதாரம்: இந்த பகுதி மக்கள் ஜீவனோபாய விவசாயிகள் ஆவர். இங்கு இயங்கி வரும் ‘ரக்ஷ கவச்ச நெய்வோர் சங்கம்’ இந்த பகுதியில் குடிசை தொழில்கள் அதிகம் இருப்பதை குறிக்கின்றது. புவியியல்: ஆகும்பே, மேற்கு மலை பகுதியில் உள்ள ஈரமான பிராந்தியத்தில் உள்ளது. இந்த பகுதி அழகான காட்சிளுக்கும், மலை ஏறுவதற்கும், அட்டை பூச்சி வளர்ப்புக்கும் பெருமை மிக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Subhash~tawiki/மணல்தொட்டி&oldid=1872214" இலிருந்து மீள்விக்கப்பட்டது