பயனர்:SoundappanselvarajPU/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 (Rights to Persons with Dissabilities act 2016) என்பது இந்திய பாராளுமன்றத்தால் டிசம்பர் 2016இல் இயற்றபட்ட ஒரு சட்டமாகும்.[1] இச்சட்டம் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் அவர்களின் உரிமைக்காக இந்திய அரசால் 28, டிசம்பர் 2016 அன்று நடைமுறைபடுத்தப்பட்டது.[2]

வரலாறு[தொகு]

இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு முதன்முதலில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு சட்டம் இயற்றபட்டது. [3] ஆனால், இச்சட்டம் பல்வேறு குறைபாடுகளை கொண்டிருந்தது. எனவே, ஐக்கியநாடுகள் அவை 2006, டிசம்பர் 13 அன்று மாற்றுத்திறனாளிகலுக்காக ஒருஉரிமை பிரகடனத்தை கொண்டுவந்தது. இந்த பிரகடனத்தில் இந்தியா அக்டோபர் 2007 இல் கையெழுத்திட்டு இணைந்துக்கொண்டது.[4] இது பின்வரும் முக்கிய கூறுகளை கொண்டுள்ளது:

  1. மாற்றுத்திறனாளிகளின் உரிமை மற்றும் நலம்
  2. சம உரிமை
  3. வேலைவாய்ப்பு

இந்த பிரகடனத்தின்படி இந்திய அரசு 2016ல் இந்திய பாராளுமன்ற மக்களவையில் இந்த சட்ட வரைவை கொண்டுவந்தது. பல்வேறு பரிசீலனைகளுக்கு பின்னர் இச்சட்டம் 2016ல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின்னர் சட்டமாக நடைமுறைபடுத்தப்பட்டது.

சிறப்புக் கூறுகள்[தொகு]

2017ல் முழுவதும் நடைமுறைக்கு வந்த இச்சட்டம், 17 அத்தியாயங்களையும் 95 பிரிவுகளையும் கொண்டுள்ளது. மேலும், இச்சட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை அளிப்பதோடு பல சிறப்புக் கூறுகளையும் கொண்டுள்ளது.[5] இதன் சில சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

  • அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு
  • சமூகத்தில் சம உரிமை
  • கல்வி பெறும் உரிமையை உறுதி செய்தல்
  • மாற்றுத்திறனாளிகளுக்கான உயர் ஆணையர்
  • குறைபாட்டின் பிறிவுகளை 7லிருந்து 21ஆக வகைபடுத்தியுள்ளது.[6] [7]
  • இட ஒதுக்கீட்டினை 3லிருந்து 4 சதவீதமாக அதிகரித்தல்
  • பொது இடங்களை இணக்கமாக மாற்றுதல்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு.[8]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]