பயனர்:Samson.ggn

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சா. சாம்சன், 1971 -ம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், 19 -ம் நாள், இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியில் திரு. ஜோ. சாமுயேல் துரைராஜ், திருமதி விமலா சாமுயேல் தம்பதியரின் ஐந்து மக்களில் மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

தனது பள்ளிப்படிப்பைப் பாளையங்கோட்டையில் உள்ள "செவென் டாலர்ஸ்", "ரோஸ் மேரி" ஆகிய பள்ளிகளில் படித்தார். பின்பு, பாளை புனித யோவான் கல்லூரியில் அறிவியல் (பௌதிகம்) பட்டப்படிப்பையும், சென்னை லயோலா கல்லூரியில் அறிவியல் (பௌதிகம்) பட்டமேற்படிப்பையும் முடித்தார். பின்பு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணி புரிந்தார்.

தனது மாணவர் பருவத்திலேயே இயேசுவின் மீது நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்த இவர், தன வாழ்க்கையில் பல வழிகளில் உண்மையான மனஅமைதியையும், மனநிறைவையும் தேடி அலைந்தும், தனக்குக் கிடைத்ததெல்லாம் குறைவுள்ளதும் தற்காலிகமும் ஆனது என்றும் ஆண்டவர் இயேசு மட்டுமே தனக்கு உண்மையான மனஅமைதியையும் மனநிறைவையும் தரமுடியும் என்று தன் அனுபவத்தில் உணர்ந்து, ஆண்டவர் இயேசுவுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆண்டவர் இயேசுவின் அழைப்பை ஏற்று, தன் வங்கிப்பணியை விட்டு, ஆண்டவர் இயேசுவை மக்களுக்குத் தருவதைத் தன் முழு நேரப்பணியாக செய்துவருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Samson.ggn&oldid=805269" இருந்து மீள்விக்கப்பட்டது