பயனர்:Sa na kannan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1994ல் தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பு ஜனாதிபதியாக மண்டேலா பதவியேற்றவுடன், ஜொகனஸ்பர்கில் நடந்த தென் ஆப்பிரிக்கா - ஜாம்பியா இடையே நடந்த கால்பந்து மேட்சைப் பார்க்க வந்துவிட்டார். ’சர்வதேச விளையாட்டு அரங்கில் மீண்டும் நுழையவேண்டிய நேரமிது’ என்று ரசிகர்களிடையே உற்சாகமாகப் பேசினார் மண்டேலா. ’பதவியேற்றவுடன் பார்ட்டிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் கால்பந்து மேட்சுக்கு ஏன் வந்தீர்கள்?’ என்கிற கேள்விக்கு, ’உலகம் தென் ஆப்பிரிக்காவை நிராகரித்த சமயத்தில், நமது விளையாட்டு வீரர்கள் செய்த தியாகத்துக்கு நான் எந்தளவுக்கு மதிப்பளிக்கிறேன் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.’ என்றார். நிறவெறி மற்றும் இன ஒதுக்கலுக்குத் தீவிரமாக ஆதரவளித்த தென் ஆப்பிரிக்க அரசுக்கு நெருக்கடி தரும் விதமாக, 1968ம் ஆண்டு ஐ.நா, தென் ஆப்பிரிக்காவுடனான கலாசார, கல்வி, விளையாட்டுத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டி மற்றும் உலகக் கால்பந்துப் போட்டிகளில் ஆடத் தடை, தென் ஆப்பிரிக்காவுடன் டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆட இந்தியா மறுப்பு என அடி மேல் அடி விழுந்தது தென் ஆப்பிரிகாவுக்கு. கருப்பின மக்கள், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் புறக்கணிக்கப்படுவதைப் பற்றி கேள்வியெழுப்பினார் பிராட்மேன். தடைகளால் பல தெ.ஆ விளையாட்டு வீரர்களின் திறமைகள் முடக்கப்பட்டன. அவர்கள் வேறு இடங்களில் திறமையை வெளிப்படுத்த முயன்றார்கள். பசில் டிஒல்வேரியா என்கிற கலப்பின தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர், சொந்த மண்ணில் வாய்ப்புகள் கிடைக்காமல் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி திறமையை நிரூபித்தார். அதனால் அவருக்கு இங்கிலாந்து அணியில் இடம் கிடைத்தது. மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியாவுடனான சுற்றுப்பயணங்களில் இடம்பிடித்த பசிலுக்கு, தென் ஆப்பிரிக்காவுடனான சுற்றுப்பயணத்தில் இடம் கிடைக்கவில்லை. பசில், தென் ஆப்பிரிக்காவில் விளையாடுவதை தெ.ஆ அரசு விரும்பவில்லை. கிரிக்கெட் தொடரில் தெ. ஆ. அரசு காண்பித்த இன வேறுபாடு இங்கிலாந்தில் சர்ச்சையைக் கிளப்பியது. எதிர்ப்புகள் உருவாகின. விளைவாக, இங்கிலாந்தின் தெ.ஆ. சுற்றுப் பயணம் ரத்தானது. ஏற்கெனவே வரிசையாக பல தடைகளைச் சந்தித்து வந்த தென் ஆப்பிரிக்காவுக்கு பசில் விவகாரத்தால், நிலைமை முற்றிப் போனது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் நிலவி வந்த வெள்ளையர் ஆதிக்கம் மற்றும் நிறவெறியின் கொடூரத்தை உணர்ந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), தென் ஆப்பிரிக்காவைத் தடை செய்தது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு சர்வதேச அணிகளுடன் கிரிக்கெட் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டது. தடைக்காலத்தில், தென் ஆப்பிரிக்காவின் விளையாட்டுத் துறை சுணங்கிப் போகாமல் இருக்க, உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டன. 1980களிலேயே உள்ளூர் கிரிக்கெட் மேட்சுகள், இரவு - பகல் ஆட்டமாக (ஃப்ளட்லைட் உதவியுடன்) நடத்தப்பட்டன. (அதனால்தான் தெ.ஆ., சர்வதேச அரங்கில் மீண்டும் காலடி எடுத்து வைத்தவுடன் உடனடியாக இந்திய அணி அங்குச் சுற்றுப்பயணம் செய்யமுடிந்தது.) இந்த நிலையில், பெரிய வாய்ப்புகளுக்காக, பல தெ.ஆ. விளையாட்டு வீரர்கள் இங்கிலாந்துக்குச் சென்று, தங்கள் திறமையை நிரூபிக்க ஆரம்பித்தார்கள். புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் கூட தடை அகற்றப்படுவதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்காக ஆடுவதாக இருந்தது. கவுண்டியில் ஆடிக்கொண்டிருந்தவரை இங்கிலாந்து அணியில் சேர்க்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இங்குதான் மண்டேலாவால் திருப்புமுனை நிகழ்ந்தது. மண்டேலா, சிறையில் இருந்தபோதும், வெள்ளை, கருப்பின மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கமுடியும் என்று திடமாக நம்பினார். இள வயதில் பாக்ஸிங் சாம்பியனாக இருந்தால் அவருக்கு விளையாட்டின் அருமை தெரிந்தது. கிரிக்கெட், கால்பந்து, ரக்பி என தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற விளையாட்டுகளில் இரு இன மக்களும் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தவேண்டும் என்று முயற்சிகள் எடுத்தார். பிப்ரவரி 1990ம் ஆண்டு, 27 வருடங்களுக்குப் பிறகு, 75வது வயதில், சிறையிலிருந்து மண்டேலா விடுவிக்கப்பட்ட பிறகு கடகடவென மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. தென் ஆப்பிரிக்காவில் அரசியல், சமூக சூழல் மாறிக்கொண்டிருந்ததால் ஐசிசி, ஒரு நல்ல தருணத்துக்காகக் காத்திருந்தது. மண்டேலாவின் அஞூணூடிஞிச்ண Nச்tடிணிணச்டூ இணிணஞ்ணூஞுண்ண் (அNஇ) கட்சியின் முயற்சியால், குணிதtட அஞூணூடிஞிச்ண இணூடிஞிடுஞுt க்ணடிணிண (குஅஇக்), குணிதtட அஞூணூடிஞிச்ண இணூடிஞிடுஞுt ஆணிச்ணூஞீ (குஅஇஆ, இது கலப்பின அமைப்பு) என தென் ஆப்பிரிக்காவில் இயங்கி வந்த இரு கிரிக்கெட் அமைப்புகள்ஒன்றிணைக்கப்பட்டு, ஜூன் 1991ல், கூடஞு க்ணடிtஞுஞீ இணூடிஞிடுஞுt ஆணிச்ணூஞீ ணிஞூ குணிதtட அஞூணூடிஞிச் என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது. மண்டேலா சிறையிலிருந்து விடுதலையாகி இந்த புதிய கிரிக்கெட் அமைப்பைத் தொடங்க முக்கிய காரணமாக இருந்தார். அவர் நினைத்த மாதிரியே பலன்கள் தெரிய ஆரம்பித்தன. முழு ஜனநாயக தேசமாக தென் ஆப்பிரிக்க மாறத் தொடங்கியதால் கொஞ்சம் கொஞ்ச்மாக ஒவ்வொரு தடையும் விலக்கப்பட்டன. மண்டேலாவின் பரிந்துரையால் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தெ.ஆவுக்கு ஆதரவாக ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்தன. க்இஆ தோற்றுவிக்கப்பட்டதால், இன வேறுபாடு இனி இருக்காது என்கிற நம்பிக்கையில் ஐசிசியும் தெ.ஆ.-வை ஓர் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. அனுமதி கிடைத்த நான்கு மாதங்கள் கழித்து தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்தது. தெ.ஆ-வில் இன ஒதுக்கல் தீவிரமாக இருந்தபோது முதல்முதலாக தெ.ஆ-வின் தூதரகத்தை இழுத்துமூடியது இந்திய அரசுதான். கருப்பின, கலப்பின நாட்டுவரோடு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதில்லை என்கிற அவர்களது முடிவால் அதுவரை இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் கிரிக்கெட் மைதானத்தில் சந்தித்துக்கொண்டது கிடையாது. 1971ல் தென் ஆப்பிரிக்காவுக்கு சர்வதேச அரங்கில் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது. அதுவரை அவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வெள்ளை நாடுகளிடம் மட்டும்தான் கிரிக்கெட் விளையாடியிருந்தார்கள். மேற்கு இந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் போன்ற வெள்ளையரல்லாத அணியினருடன் ஆடியது கிடையாது. ஆனால், தடையை விடுவிக்கப்பட்ட பிறகு அவர்களை முதலில் அழைத்தது, அவர்கள் அதுவரை நிராகரித்த இந்தியாதான். ’இந்தச் சுற்றுப் பயணம் சாத்தியமானதே மண்டேலா எடுத்த முயற்சிகளால்தான். மண்டேலா இந்தியாவுக்குச் சென்று தன் மக்களுக்காகப் போராடியதற்கு நன்றி தெரிவித்ததாலேயே முதல்முதலாக தெ.ஆ கிரிக்கெட் அணியை இந்தியா அழைத்தது. 102 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் ஆடினாலும் அப்போதுதான் முதல்முதலாக இந்தியாவுடன் ஆடமுடிந்தது’ என்கிறார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் இயக்குநர் அலி பேக்கர். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களை ஏற்றி வந்த விமானம் தான், முதல்முதலாக இந்தியாவுக்குள் நுழையும் முதல் தெ.ஆ. விமானம். கொல்கத்தா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து தெ.ஆ. வீரர்களை வரவேற்றார்கள். முதலில் கூட்டத்தைப் பார்த்து முற்றுகைப் போராட்டம் ஏதும் நடக்கிறதா என்றுதான் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பயந்தார்கள். ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புக்கு மத்தியில் தெ.ஆ. கிரிக்கெட் அணி இந்தியாவில் ஆடியது. இந்தியர்களின் அளப்பரியா அன்பை வைத்து தெ.ஆ. கேப்டன் கிளைவ் ரைஸ் இவ்வாறு சொன்னார்: ’இப்போது புரிகிறது. நிலாவில் ஆர்ம்ஸ்டிராங் காலடி எடுத்துவைத்தபோது எப்படி உணர்ந்திருப்பார் என்று.’ இந்தியாவுக்கு வந்த அணியில் அனைத்து வீரர்களும் வெள்ளையர்களாக இருந்ததால் நான்கு இளம் கிரிக்கெட் வீரர்களும் (அதில் இருவர் கருப்பர்கள்) அணியோடு பயணித்தார்கள். பதிலுக்கு அடுத்த வருடம் இந்திய அணி, தெ.ஆ-வுக்குச் சென்றது. தெ.ஆவுக்குச் சென்ற முதல் கலப்பின சர்வதேச அணி என்கிற முத்திரையுடன். அங்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள், மண்டேலாவைச் சந்தித்தார்கள். கிரிக்கெட் வீரர்களின் கையெழுத்து கொண்ட கிரிக்கெட் பேட்டை நினைவுப்பரிசாக மண்டேலாவுக்கு வழங்கினார்கள். ஒருமுறை மண்டேலாவை நேரில் சந்தித்தார் கவாஸ்கர். உங்களைப் பற்றி நிறைய படித்திருக்கிறேன். சந்திக்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். இனி நான் நிம்மதியாக இறப்பேன்’ என்று கவாஸ்கரிடம் உருகியிருக்கிறார் மண்டேலா. மண்டேலா, தென் ஆப்பிரிகாவின் விளையாட்டுத் துறைக்கு ஓர் எதிர்காலத்தை உருவாக்கித் தந்தார். 20 வருடங்களுக்கு முன்னால் எந்த ஒரு விளையாட்டுத் துறையிலும் தென் ஆப்பிரிக்கா கிடையாது. அது அப்படியே தொடர்ந்திருந்தால் பல நல்ல தருணங்களை, அருமையான வீரர்களை இழந்திருப்போம். ஆனால் மண்டேலாவின் விடுதலை, அவர் எடுத்த முயற்சிகள் போன்றவை தெ.ஆ. விளையாட்டுத்துறையை அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு நகர்த்தியது. 1991ல் தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதியளிக்கப் பட்டாலும், 1992 உலகக்கோப்பை போட்டியில் இடமளிக்க மறுக்கப்பட்டது. ‘கிரிக்கெட் உலகக்கோப்பைப்போõட்டியில் தெ.ஆ இடம்பெறவேண்டுமா?’ என்கிற நிருபர் சந்திப்பில் மண்டேலாவிடம் கேட்கப்பட்டபோது, ’ஆமாம். அந்தப் போட்டியில் தெ.ஆ. இடம்பெற வேண்டியது அவசியம்’ என்று ஒரேவரியில் பதிலளித்தார் மண்டேலா. அவ்வளவுதான். உடனே அச்செய்தி உலகம் முழுக்கப் பரப்பப்பட்டது. மண்டேலாவின் விருப்பத்துக்காக ஐசிசியும் தென் ஆப்பிரிக்க அணியை 1992 உலகக்கோப்பைப் போட்டியில் சேர்த்துக்கொண்டது. அப்போட்டியில், ஃபீல்டிங்கினால் அட்டகாசப்படுத்தி, அனைத்து ரசிகர்களிடம் பாராட்டுப் பெற்றது தெ.ஆ. கிரிக்கெட் அணி. 2003 கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இதற்கும் அடித்தளமாக இருந்தவர், மண்டேலா. உலகமே பார்த்து ரசித்த, தென் ஆப்பிரிக்கா 2010 கால்பந்து உலகக்கோப்பைப் போட்டியும் மண்டேலா முன்னெடுத்ததுதான். ’மண்டேலாவால்தான் தெ.ஆ.வுக்கு உலகக்கோப்பைப் போட்டி கிடைத்தது. ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதல் உலகக்கோப்பைப் போட்டி சாத்தியமாகியிருக்கிறது.’ என்றார் ஃபிஃபாவின் தலைவர் ப்ளேட்டர். ஆப்பிரிக்காவில் உலகக்கோப்பைப் போட்டியை நடத்தமுடியுமா என்று ஃபிஃபா சந்தேகப்பட்டபோது தெ.ஆ-வில் எல்லா வசதிகளும் உள்ளன. தைரியமாக வாய்ப்பு கொடுங்கள் என்று மண்டேலா உறுதிமொழி கொடுத்தார். இதுதொடர்பாக அவர் பல நாடுகளில் பிரசாரம் செய்து ஆதரவைத் திரட்டி வெற்றி கண்டார். போர்ட் எலிசபெத்திலுள்ள ஸ்டேடியத்துக்கு மண்டேலாவின் பெயர் சூட்டப்பட்டது. தொடக்க விழா சமயத்தில், மண்டேலாவின் கொள்ளுப் பேத்தி கார் விபத்தில் இறந்துவிட்டதால் மண்டேலாவால் அந்த விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை. இறுதிப் போட்டிக்கு அவரால் வரமுடியுமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் தெ.ஆ. மக்களுக்காக இறுதிப் போட்டியில் மண்டேலா கலந்துகொண்டார். அவர் ஸ்டேடியத்துக்கு வருகை தந்தபோது, ஜொகனஸ்பர்கில் அரங்கில் இருந்த 85,000 ரசிகர்களும் ஆர்பரித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். 1995ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ரக்பி உலகக்கோப்பைப் போட்டியில் இடம்பெற்ற தெ. ஆ. அணியில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் வெள்ளையர்கள். ஆனாலும் அந்த அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தார் மண்டேலா. தெ.ஆ-வின் கேப்டன், பியனர், வெள்ளையர்களை மட்டுமே கொண்ட ரக்பி அணியான ஸ்பிரிங்பாக்ஸின் கேப்டனும்கூட. இனவெறி தெ.ஆ. அரசுக்குத் துணை போன அணி என்கிற குற்றச்சாட்டும் ஸ்பிரிங்பாக்ஸூக்கு உண்டு. ஆனால், இறுதிப் போட்டிக்குப் பரிசளிக்க வந்த மண்டேலா, ஸ்பிரிங்பாக்ஸின் பச்சை நிற ஜெர்ஸியை அணிந்து வந்து பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். அதுவும் அது பியனரின் 6 என்கிற எண்ணைக் கொண்ட ஜெர்சி. இதைப் பார்த்த பியனர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் போனார். ’தேசிய கீதம் ஒலித்தபோது என்னால் பாடமுடியவில்லை. மண்டேலாவின் அன்பை நினைத்து நான் அழுதுகொண்டிருந்தேன்’ என்று பேட்டி கொடுத்தார் பியனர். ஏழை மக்களுக்காக நிதி திரட்டுவதில் மண்டேலாவை யாரும் மிஞ்சமுடியாது என்கிறார் பேக்கர். தினமும் காலையில் வணிகச் செய்தித்தாள்களை எடுத்துவைத்துக்கொண்டு எந்த கம்பெனி நல்ல லாபத்தில் இயங்குகிறது என்று கவனிப்பார். உடனே அந்த கம்பெனிகளுக்கு அவரே போன் செய்வார். சிஇஓ-விடம் பேசுவார். ’வடக்கில் ஒரு கிராமம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. நீங்கள் ஒரு இரண்டு மில்லியன் ராண்ட் தந்து உதவமுடியுமா?’ என்று மென்மையாகக் கேட்பார். நாட்டின் ஜனாதிபதி அதுவும் மண்டேலா கேட்டு, கொடுக்காமல் இருக்கமுடியுமா? இதுவரை ஒருவர்கூட மறுத்தது கிடையாது என்கிறார் பேக்கர். ஒருமுறை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடமும் இதேபோல கோரிக்கை வைத்திருக்கிறார். ’தெ.ஆ கிரிக்கெட் வளர்ச்சியில் என் பங்கும் கொஞ்சம் இருக்கிறது. ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்காக ஒரு மில்லியன் ராண்ட் தந்து உதவுங்கள்.’ இது தொடர்பாக தெ.ஆ. வாரியம் கூட்டம் நடத்தியது. ’இன்றுவரை இப்படிப்பட்ட நிதி உதவிகளை நம் வாரியம் செய்தது கிடையாது. என்ன செய்யலாம்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. பணம் தரக்கூடாது என்று மறுப்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்கிற பேக்கர் மடக்கினார். ஆச்சரியம். ஒருவர்கூட கையை உயர்த்தவில்லை. நாம் கையைத் தூக்கி, பிறகு யாராவது மண்டேலாவிடம் போட்டுக்கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்று அனைவரும் பயந்தார்கள். முதல் தடவையாக சமூக நலனுக்காக ஒரு மில்லியன் ராண்ட் தொகையை மண்டேலாவிடம் கொடுத்தது தெ.ஆ. கிரிக்கெட் வாரியம். மண்டேலா கொண்டுவந்த மாற்றத்தால், அசிம் ஆம்லா, பிலாண்டர், மகாயா எண்டினி, ஆஷ்லி பிரின்ஸ், பால் ஆடம்ஸ் என்று பல திறமையான கருப்பு/கலப்பின வீரர்கள் தெ.ஆ.கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்கள். தெ.ஆ-வின் கிரிக்கெட், கால்பந்து, ரக்பி அணிகளைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்தார் மண்டேலா. ஒவ்வொரு முக்கியமான போட்டிகளின்போதும் அணியின் கேப்டன்களுக்கு வாழ்த்துகளைச் சொல்வது மண்டேலாவின் வழக்கம். திறமையாகப் பங்களித்த தெ.ஆ. வீரர்களுக்கு போன் செய்து பாராட்டுவார். விளையாட்டால் மட்டுமே இன, நிற வேறுபாடுகளைக் களையமுடியும், மக்களை ஒற்றுமைப்படுத்தமுடியும் என்கிற மண்டேலாவின் நம்பிக்கையால்தான் இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு விளையாட்டு அரங்கில் ஒரு கௌரவமான இடம் கிடைத்திருக்கிறது.


இந்தியப் பெருங்கூட்டணிகள் காற்பந்தாட்டப் போட்டி 2015[தொகு]

இந்தியப் பெருங்கூட்டணிகள் காற்பந்தாட்டப் போட்டி 2015 அல்லது இந்திய சூப்பர் லீக் 2015 என்பது இரண்டாம் வருடமாக நடைபெற்ற இந்தியப் பெருங்கூட்டணிகள் காற்பந்தாட்டப் போட்டித் தொடர் ஆகும். இந்தப் போட்டித் தொடர் அக்டோபர் 3, 2015 முதல் டிசம்பர் 20, 2015 வரை நடைபெற்றது.[1] இறுதிப் போட்டியோடு சேர்த்து மொத்தம் 61 ஆட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை (உள்ளூர், வெளியூர் அடிப்படையில்) மோதின. லீக் போட்டிகளின் முடிவில் கொல்கத்தா, கோவா, தில்லி, சென்னை ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. இரண்டு கட்டங்களாக நடந்தது அரையிறுதிப் போட்டி. சென்னையின் எப்.சி அணி இந்தப் போட்டித் தொடரின் வாகையாளர் ஆகும். இறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்.சி, எஃப்.சி கோவா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது [2][3]

தொடக்கவிழா[தொகு]

இப்போட்டிகளின் தொடக்கவிழா சென்னையின் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினி, ஐஎஸ்எல் நிர்வாகி நீட்டா அம்பானி, சென்னையின் எஃப்.சி. அணியின் இணை உரிமையாளரும் நடிகருமான அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றார்கள்.

அணிகள்[தொகு]

இந்தத் தொடரில் எட்டு அணிகள் பங்கு பெற்றன.

  • சென்னையின் எப்.சி,
  • அட்லெடிகோ டி கொல்கத்தா,
  • டெல்லி டைனமோஸ் எப்.சி,
  • கோவா எப்.சி,
  • புனே சிட்டி எப்.சி,
  • கேரளா பிளாஸ்டர் எப்.சி,
  • மும்பை சிட்டி எப்.சி,
  • நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி)

அதிக கோல் அடித்தவர்கள்[தொகு]

  • ஸ்டீவன் மெண்டேஸா (சென்னை) - 13
  • இயான் ஹியூமி (கொல்கத்தா) - 11
  • ரெனால்டோ (கோவா) - 7
  • சுனில் சேத்ரி (மும்பை) - 7
  • அன்டோனியோ (கேரளா) - 6

மேற்கோள்கள்[தொகு]

  1. "இந்தியப் பெருங்கூட்டணிகள் காற்பந்தாட்டப் போட்டி 2015இன் அட்டவணை". Indian Super League.
  2. "இறுதிப் போட்டி முடிவுகள்". Firstpost. 20 December 2015. http://www.firstpost.com/sports/isl-final-chennaiyin-fc-snatch-victory-from-the-jaws-of-defeat-to-beat-goa-3-2-in-thriller-2553270.html. 
  3. "வாகையாளர் ஆன சென்னையின் எப். சி". ISL. 20 December 2015. http://www.indiansuperleague.com/news/3495-chennai-beat-goa-in-a-3-2-thriller-to-become-hero-isl-2015-champions. 

இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி, கடந்த அக்டோபர் 3-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தப் போட்டியில் என 8 அணிகள் பங்கேற்றன. தொடக்கவிழா, சென்னையின் நேரு விளையாட்டு அரங்கில் உற்சாகமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினி, ஐஎஸ்எல் நிர்வாகி நீட்டா அம்பானி, சென்னையின் எஃப்.சி. அணியின் இணை உரிமையாளரும் நடிகருமான அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றார்கள். இறுதிப் போட்டியோடு சேர்த்து மொத்தம் 61 ஆட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை (உள்ளூர், வெளியூர் அடிப்படையில்) மோதின. லீக் போட்டிகளின் முடிவில் கொல்கத்தா, கோவா, தில்லி, சென்னை ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. இரண்டு கட்டங்களாக நடந்தது அரையிறுதிப் போட்டி. இறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்.சி., எஃப்.சி கோவா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஐ.எஸ்.எல். சாம்பியன் ஆகியுள்ளது.

ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியில் பாதி லீக் ஆட்டங்கள் முடிந்திருந்தபோது சென்னையின் எஃப்.சி. அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ’சென்னைடா’ என்று காலரைத் தூக்கிக்கொள்ள இனி சந்தர்ப்பம் கிடைக்காதா என்று விளையாட்டு அறிவுக்குப் புகழ்பெற்ற நம் ரசிகர்கள் நொந்து கிடந்தபோதுதான் அந்த அதிசயம் நடந்தது. ஐ.எஸ்.எல்.-லின் கடைசி 4 லீக் ஆட்டங்களில் அட்டகாசமாக ஆடியது சென்னை அணி. வரிசையாக கேரளா, தில்லி, மும்பை, புனே அணிகளை வீழ்த்தியது. இதனால் ஜம் என்று அரையிறுதிக்கு முன்னேறி, கொல்கத்தா அணியை கோல் விகிதத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. கோவா - ஃபடோர்டாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் நம் ரசிகர்களால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. சென்னையின் எஃப்.சி. - எஃப்.சி கோவா அணிகள் மோதிய இப்போட்டியில், முதல் கோலை சென்னை அணி அடித்தது. ஆனால் அடுத்த இரண்டு கோலை அடித்து, ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்தபோது முன்னிலை பெற்றது கோவா. அதற்கு முன்பு, பெனால்டி கிக் வாய்ப்பை சென்னை அணியின் சூப்பர் ஸ்டார் மெண்டோஸா தவறவிட்டதால் கூடுதல் பதற்றத்தில் இருந்தார்கள் ரசிகர்கள். அப்போதுதான், நான் இருக்க பயமேன் என்று ஆட்டத்தில் திருப்புமுனையை உண்டாக்கினார் மெண்டோஸா. எதிர்பாராதவிதமாக 90-வது நிமிடத்தில் கோவா கோல் கீப்பரின் தவறால் சென்னை அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. ஸ்கோர் 2-2 என்று சமநிலை ஆனது. அடடா, இனி யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்று கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தபோது, அடுத்தச் சில நொடிகளில் மெண்டோஸாவின் மேஜிக்கைக் காணமுடிந்தது. அசத்தலான ஒரு கோல் அடித்து சென்னை அணியை ஐ.எஸ்.எல். சாம்பியன் ஆக்கினார்.

இந்த ஐ.எஸ்.எல்-லில் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தவர் சென்னை அணியின், மெண்டோஸா. ஐ.எஸ்.எல். போட்டியில் இரண்டு ஹாட்ரிக் கோல்களை அடித்த முதல் வீரரும் இவர்தான் (கோவா, கேரளா அணிகளுக்கு எதிராக). 2014-ம் வருடமும் நன்றாகவே ஆடினார் (4 கோல்கள்). ஆனால் காயம் காரணமாக அவரால் பிற்பகுதி ஆட்டங்களில் பங்குபெற முடியாமல் போனது. இந்தமுறை கடைசிவரை சென்னை அணிக்குப் பெரிய பலமாக இருந்தார். அதாவது மெண்டோஸா இல்லாமல் சென்னை அணியால் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்கமுடியுமா என்று எண்ணுகிற அளவுக்கு. முதல் ஆறு போட்டிகளில் ஆறு கோல் அடித்த மெண்டோஸா, அடுத்த 3 போட்டிகளில் ஒரு கோலும் அடிக்காமல் சென்னை அணிக்குச் சங்கடம் உண்டாக்கினார். இதனால் அணி நிர்வாகம் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவரை ஆடவைக்கவில்லை. இது மெண்டோஸாவை உசுப்பிவிட்டது. அதன்பிறகு அவருடைய ஆட்டமே வேறுவிதமாக இருந்தது. மெண்டோஸாவின் ஆட்ட்த்தைப் பார்ப்பதே சுகமான அனுபவம். கோல் அடிக்க முயற்சி செய்யும்போது காண்பிக்கும் நிதானமும், கால்பந்துக் கலையை வெளிப்படுத்தும் விதமும் அணி வீரர்களுக்குப் பக்கபலமாக இருந்து உதவுவதும்... அடடா, பொக்கிஷம் இவர் என்றுதான் தோன்றும். மெண்டோஸா மட்டும் கில்லியாக இருந்து மற்றவர்கள் சுமாராக விளையாடினால் அதனால் அணிக்குப் பலன் கிடைக்குமா? இந்தவிதத்தில் சென்னை மிகவும் கொடுத்தவைத்த அணி. அத்தனை வீரர்களும் மணிமணியாக ஆடினார்கள். கோல் கீப்பர் அபுலா இடல், ஸ்டிரைக்கர் ஜேஜே, மிட்ஃபீல்டர்கள் பெலிசாரி, இலானோ, பின்கள வீரர்கள் மென்டி, வாடூ என ஒரு வலுவான கூட்டணி அமைந்ததாலேயே சென்னை அணியால் சிங்கநடை போடமுடிந்தது. இல்லாவிட்டால் கடைசி இடத்திலிருந்து மீண்டுவந்து முதல் இடத்தைப் பிடிக்கமுடியுமா? கடந்த முறை கொல்கத்தா அணிக்காக விளையாடிய ஸ்டிரைக்கர் பிக்ரு, கோல் கீப்பர் அபுலா எடல் ஆகிய இருவரையும் இந்த ஆண்டு சென்னை அணி தேர்வு செய்தது மாஸ்டர் ஸ்டிரோக்காக அமைந்தது. சென்னையின் அணியில் உள்ள 24 வயது இந்திய வீரர், ஜேஜே, இந்த வருடப் போட்டியின் சிறந்த இளம் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 6 கோல்கள் அடித்தார். சுனில் சேத்ரி (மும்பை) 7 கோல்கள் அடித்து இந்தப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார். ஐ.எஸ்.எல்.-லில் முதல் ஹாட்ரிக் அடித்த இந்தியரும் சேத்ரி தான். நார்த்ஈஸ்ட் கோல் கீப்பர் ரெஹெனேஸ், சென்னையின் தோய் சிங், கோவாவின் ரோமியோ பெர்னாண்டஸ், மந்தர் ராவ் தேசாய், டெல்லியின் அனாஸ், புனேவின் ஜாக்கிசந்த் சிங், கொல்கத்தாவின் அம்ரிந்தர் சிங், அர்னாப் மாண்டல் போன்ற வீரர்கள் இந்தியன் சூப்பர் லீக் என்கிற பெயருக்கு முழு அர்த்தம் தந்து கவனம் ஈர்த்துள்ளார்கள்.

டிசம்பர் 1, 2015. இந்தத் தேதியை சென்னை மக்களால் மறக்கவேமுடியாது. அன்றுதான் 50 செ.மீ. கனமழை கொட்டி ஊரே வெள்ளமான நாள். அதே தினத்தில் சென்னையில் ஐ.எஸ்.எல். போட்டி நடந்தது என்றால் யார் நம்புவார்கள்? அதைப் பார்க்க 12 ஆயிரம் ரசிகர்களும் வந்தார்கள் என்பதையும்! டிசம்பர் 1 அன்று அந்த கனமழையிலும் சென்னையும் மும்பையும் ஆடின. 3-0 என வெற்றி பெற்றது சென்னை. தங்கள் கண் எதிரே சென்னையின் கனமழையைப் பார்த்ததாலோ என்னவோ, ஐ.எஸ்.எல். போட்டியை வென்றவுடன் சென்னை அணி வீரர்களும் நிர்வாகிகளும் உடனே ஊருக்குத் திரும்பவில்லை. அடுத்தநாள் காலையிலேயே சென்னைக்கு வந்திறங்கினார்கள் ரசிகர்களிடம் கோப்பையைக் காண்பித்து மகிழ்ந்தார்கள். ’வெள்ளத்தால் பாதித்த சென்னை மக்களுக்காக பிரார்த்தனை செய்வோம், சிறப்பாக விளையாடுவோம் என்று சொன்னோம். ஐ.எஸ்.எல். கோப்பையை வென்று அந்த வாக்குறுதியைக் காப்பாற்றி இருக்கிறோம். இந்த வெற்றியையும், கோப்பையையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, போராட்ட குணம் கொண்ட சென்னை மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார் சென்னை அணியின் இணை உரிமையாளரான நடிகர் அபிஷேக் பச்சன். 2015 ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டி சாம்பியன்: சென்னையின் எஃப்.சி. சாம்பியனுக்கான பரிசுத் தொகை: ரூ.8 கோடி தங்க ஷூ : மெண்டோஸா (சென்னை) (அதிக கோல்கள்: 13) தங்க கையுறை : அபுலா எடல் (சென்னை) (சிறந்த கோல் கீப்பர்) சிறந்த இளம் வீரர்: ஜேஜே (சென்னை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sa_na_kannan/மணல்தொட்டி&oldid=2481899" இலிருந்து மீள்விக்கப்பட்டது