பயனர்:Rohinth7/மணல்தொட்டி
எனது புகைபடம் | |
பெயர் | ரோஹிந்த் |
---|---|
இயற்பெயர் | ரோஹிந்த் |
சொந்தப் பெயர் | ரோஹிந்த் |
பால் | ஆண் |
பிறந்த நாள் | 03.10.1997 |
பிறந்த இடம் | மேட்டுப்பாளையம் |
தற்போதைய வசிப்பிடம் | தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
இனம் | தமிழன் |
கல்வி, தொழில் | |
கல்வி | Pursuing B.A. |
கல்லூரி | கிறித்து பல்கலைக்கழகம் |
பல்கலைக்கழகம் | கிறித்து பல்கலைக்கழகம் |
பாடசாலை | குழந்தை இயேசு ஆங்கில மேல்நிலைப் பள்ளி |
கொள்கை, நம்பிக்கை | |
பொழுதுபோக்கு | புத்தகங்கள் படித்தல், விளையாடுதல், செய்திகள் படித்தல். |
சமயம் | இந்து மதம் |
என் பெயர் க.ரோஹிந்த்.எனக்கு 18 வயது ஆகிறது.என் பெற்றோர் பெயர் கருணாகரன் மற்றும் சரஸ்வதி என்பதாகும்.எனக்கு ஒரு தங்கை உள்ளால் அவள் பெயர் விஷ்ருதி.எனது சொந்த ஊர் கோவை மாநகரில் உள்ள காரமடை என்பதாகும்.நான் படித்து வளர்ந்தது எல்லாம் திருப்பூர் மாவட்டத்தில்.நான் எனது பள்ளிப்படிப்பை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தை இயேசு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முடித்தேன்.நான் தற்போது பெங்களூரில் உள்ள கிறித்து பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.எனக்கு சிறுவயதில் இருந்து இந்திய ஆட்சிப் பணி(இ.ஆ.ப) தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பதே கனவு.எனக்கு படிப்பிற்கு பிறகு அதிகம் பிடித்தது விளையாட்டு.எனக்கு எல்லா விளையாட்டுகளிலும் விருப்பம் உண்டு.ஆனால் எனக்கு கால்பந்து விளையாட்டில் அதிக ஈடுபாடு உண்டு.நான் பள்ளியில் படிக்கும் போது எனது பள்ளியின் கால்பந்து அணியில் இடம் பெற்றிருந்தேன்.எனக்கு மிகவும் பிடித்த கால்பந்து வீரர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டொ.எனக்கு மிகவும் பிடித்த கால்பந்து அணி இங்கிலாந்தில் உள்ள மான்சஸ்டர் யுணைட்டட் ஆகும்.எனக்கு செய்திகள் படிப்பதிலும் பார்ப்பதிலும் மிகவும் ஈடுபாடு உண்டு.எனக்கு அரசியலில்லும் ஈடுபாடு உண்டு.எனக்கு எல்லா அரசியல் தலைவர்களிடமும் உள்ள நல்ல குணங்களை மட்டும் பிடிக்கும்.எனக்கு பள்ளியிலும் கல்லூரியிலும் பல நண்பர்கள் உண்டு.எனக்கு புதிய மனிதர்களை பார்த்து புதிய நண்பர்கள் உருவாக்கி கொள்வதில் அதிக ஆசை உள்ளது.நான் நன்றாக படிக்ககூடிய மாணவன்.எனக்கு ஏட்டுகளில் உள்ளதைப் படித்து மனப்பாடாம் செய்து அதை பரீட்சையில் எழுதுவது பிடிக்காது.என்னைப் பொருத்தவரையில் மாணவர்களின் திறமையையும் அறிவையும் சோதிக்க அது சரியான வழி இல்லை.நான் சமுதாயத்தில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு நமது கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர முயற்ச்சிப்பேன்.எனக்கு புத்தகங்கள் படிப்பதிலும் ஆர்வம் உண்டு.எனக்கு பாடல்கள் கேட்பதிலும் ஆர்வம் உண்டு.நான் எனது வாழ்வில் கடைசி வரையில் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாகவும் பின்னர் ஒரு நல்ல அரசியல் தலைவராகவும் இருக்க விரும்புகிறேன்.நான் கடைசி வரையில் எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல மாணவனாகவும் ஒரு நல்ல மகனாகவும் இருக்க விரும்புகிறேன்.அது மட்டும் அல்லாது எனது தாய்நாட்டுகாக நான் நிறைய நன்மைகள் செய்ய விரும்புகிறேன்.எனக்கு அதிகம் உறங்குவது பிடிக்காது.எனக்கு எந்த செயலையும் சொல்வதைக் காட்டிலும் செயலில் செய்து காட்டுவது மிகவும் பிடிக்கும்.நான் இதுவரை படித்ததில் எனக்கு பிடித்த மூன்று புத்தகங்கள் திருக்குறள்,சத்திய சோதனை மற்றும் மெயின் கெம்ப்(MEIN KEMPH).என்னைப் பற்றி நான் சுயமதிப்பீடு செய்ய இந்த கட்டுரை உதவியது.ஜெய் ஹிந்த்.