உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Priyaspace/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழகர் ராமானுஜம் (Azhagar Ramanujam) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொள்ளாச்சி நகரிலுள்ள என்.ஜி.எம் கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார். இயற்பியல் அறிஞரான இவர் பிரபஞ்சவியல், சார்பியல், அணி இயங்கியல் முதலான துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இயற்பியலை குறிப்பாக பிரபஞ்சவியலை இந்திய தொன்மை தத்துவங்களோடு இணைக்கும் கருதுகோள்களை முன்வைக்கும் அறிவியல் ஆன்மிகப் பேச்சாளராக அழகர் அறியப்படுகின்றார். இந்திய இயற்பியல் காங்கிரசு, பொது சார்பியல் மற்றும் ஈர்ப்பியல் குழுக்களில் இவர் ஆயுட்கால உறுப்பினராவார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

அழகர் 1941 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் தமிழகத்தில் விருதுநகருக்கு அருகாமையிலுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தார். தனது முனைவர் பட்டத்தை திருச்சி புனிதர் யோசேப்பு கல்லூரியில் 1980 ஆம் ஆண்டில் துகள் அறிவியல் மற்றும் சார்பியல் தத்துவத்தில பெற்றார்.[2]. 30 ஆண்டுகளாக என்.ஜி.எம் கல்லூரியில் இயற்பியல் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு 2000 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். மறைந்த மகான் வேதாத்திரி அவர்களின் தத்துவங்களை இயற்பியலோடு இணைக்கும் ஆய்வுக்கட்டுரைகளை புகழ் பெற்ற 'இந்திய இயற்பியல் இதழ்' முதலான ஆய்வுத்தொகுப்புகளில் வெளியிட்டுள்ளார்[3]. வேதாத்திரி மகரிசியோடு நேரடிச் சீடராக 10 வருடத்துக்கும் மேலாக ஆன்மிக அனுபவம் பெற்றுள்ளார்.[4]பேரளம் வேதாத்திரி மகரிசி ஆசிரம நிறுவனராக 15 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றார்.[5] வேதாத்திரி மகரிசி எழுதின புத்தகங்களுக்கு அழகர் ராமானுஜம் முன்னுரை மற்றும் அணிந்துரைகள் எழுதி உள்ளார். [1] தமிழ்நாட்டின் ஆன்மீக அறிவியல் சொற்பொழிவாளர் மற்றும் பேச்சாளராகவும் அழகர் கருதப்படுகிறார்.[6]

சமூக சேவை

[தொகு]

அழகர் ராமானுஜம் அவர்கள் "எண்ணங்களின் சங்கமம்' என்ற, 800 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் சரணாலயம் என்ற சமூக அமைப்புடன் இணைந்து பல்வேறு சமூகத் தொண்டுகள் மற்றும் சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார். திருவாரூர் மாவட்டம் பேரளம் என்ற கிராமத்தில் 'வேதாத்திரி மகரிஷி பெருவெளி ஆசிரமம்' என்ற அமைப்பை நிறுவியுள்ளார். இதன் மூலம் 'வள்ளலார் அன்னதான திட்டம்' என்ற திட்டம் மூலம் முதியோர்களின் வீடுகளுக்கு உணவு தானம் செய்யப்படுகிறது. [7] .[8] [9]

இயற்பியல் பங்களிப்பு

[தொகு]

விண்வெளியைச் சார்ந்த நிறைக்குண்டான சமன்பாடு, அதன் தொடர்ச்சியாக நியூட்டனின் புவிஈர்ப்புச் சமன்பாட்டைத் தருவித்தல், பிரபஞ்ச விரிவுக்குறித்த ஊபுல் கோட்பாட்டை மேம்படுத்துதல் [10], பிரிட்மான் சமன்பாடுகளை மேம்படுத்துதல் [11], இருண்ட ஆற்றல் விளக்கம் முதலான இவருடை பல இயற்பியல் புத்தறிவுப் பங்களிப்புகள் உலக அரங்கில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Orcid".{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Nature of wave front of light radiations from a tachyon". Pramana. doi:10.1007/BF02846840. 
  3. "Physics behind the Dark Matter, Dark Energy and the inflationary expansion of the universe". Indian journal of Physics. doi:10.1007/s12648-018-01364-9. 
  4. "Alagar speech with Swamiji".{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "Ashram website".{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. "இறை தத்துவத்தை இலக்கியமாக மாற்றியவர் சேக்கியார்". Dinamani. https://www.dinamani.com/tamilnadu/2011/feb/07/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D-308182.html. 
  7. "இறைவனே இந்த உலகின் முதல் என்.ஜி.ஓ., : அழகர் ராமானுஜம் அறிவுரை". Dinamalar. டிச 15,2013 21:32. https://m.dinamalar.com/detail.php?id=873372. 
  8. ""அன்பு செய்து வாழ்வதே வாழ்க்கை'". Dinamalar. ஆக 21, 2013 03:26. https://www.dinamalar.com/news_detail.asp?id=785449. 
  9. "Buildings turn blue to mark Autism Day". The Hindu. April 03, 2016 00:00 IST. https://www.thehindu.com/news/cities/Coimbatore/buildings-turn-blue-to-mark-autism-day/article8427993.ece. 
  10. "An Extended Version of Hubble’s Law". Journal of modern physics. doi:10.4236/jmp.2017.87068. 
  11. "Friedmann-Like Cosmological Equations for the Accelerated Expansion of the Universe". Journal of modern physics. doi:10.4236/jmp.2020.117062 . 

வெளி இணைப்புகள்

[தொகு]

என்னில் மலர்ந்த வேதாத்திரிய விதைகள். ISBN 8184460635,9788184460636[1]

  1. என்னில் மலர்ந்த வேதாத்திரிய விதைகள். Vijaya pathipagam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8184460635, 9788184460636. {{cite book}}: Check |isbn= value: invalid character (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Priyaspace/மணல்தொட்டி&oldid=3163221" இலிருந்து மீள்விக்கப்பட்டது