பயனர்:Mpanch13114/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெப்ளர்-452B

கெப்ளர்-452B என்பது கெப்ளர் தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிரகம் ஆகும். இது ஜி-பிரிவு கெப்ளர்-452 என்ற விண்மீனைச் சுற்றி வரும் ஒரு கிரகம் என்று 2015 ஆம் வருடம் ஜூலைத் திங்கள் 23 அன்று நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டது. இக்கிரகம் பூமிக்கு மிக அருகில் இருக்கும் பல மில்லியன் கிரகங்களில் பூமியைப் போன்ற தோற்றம் உடைய ஒரு கிரகம் ஆகும். கெப்ளர்-438B என்ற கிரகம் கண்டுபடித்ததிற்குப் பிறகு, பூமியைப் போன்ற ஒரு கிரகம் இப்பொழுதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகம் சூரிய மண்டலத்திலிருந்து 1400 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றது. புளூட்டோ என்ற குறுங்கோளை ஆய்வு செய்ய நாசாவால் ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் என்ற தானியங்கி விண்கலத்தின் வேகத்தில் சென்றால் இந்த கிரகத்தினை அடைய 25.8 மில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mpanch13114/மணல்தொட்டி&oldid=1884513" இலிருந்து மீள்விக்கப்பட்டது