உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ethirkottaisaravanajothi/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் பெருவளத்தான்[1] எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பாவாலானது.இது போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூலாகும். உரை எழுதியோர்:


வா.மகாதேவ முதலியார் உரை(1907)

கா.ஶ்ரீ.கோபாலாச்சாரியார் உரை

மொ.அ.துரையரங்கனார் திறனாய்வு உரை

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரை(2004)

சிறப்புகள்: தமிழரின் பண்பாடான விருந்தினரை ஏழடி நடந்து சென்று வரவேற்றலும் வழியனுப்புதலும் குறித்து- காலில் ஏழடிப் பின்சென்று(பொரு.166)என்னும் பாடல் வரியால் அறியமுடிகிறது.


பாடினியின் கேசாதி பாத வருணனை பொருநருடன் இருக்கும் பாடினி அழகு மிக்கோளாக இருந்தாள் என்று புகழ்ந்து அவளது தலை முதல் கால் வரை 19 உறுப்புகள் இதில் வருணிக்கப்பட்டுள்ளன.(பொருந:25-47). அவையாவன: கூந்தல், திருநுதல், புருவங்கள், கண்கள், வாய், பற்கள், காதுகள், கழுத்து, தோள்கள், முன்கைகள், மெல்விரல், நகங்கள், மார்பகங்கள், கொப்பூழ், நுண்ணிடை, அல்குல், தொடைகள், கணைக்கால், பாதங்கள் என்பன.


உசாத்துணை நூல்கள்[தொகு]

  1. "Figure 4 from: Bloom D, Thomer A, Vaidya G, Guralnick R, Russell L (2012) From documents to datasets: A MediaWiki-based method of annotating and extracting species observations in century-old field notebooks. ZooKeys 209: 235-253. https://doi.org/10.3897/zookeys.209.3247". dx.doi.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-10. {{cite web}}: External link in |title= (help)