பயனர்:DSE THIRUGNANAM VPM/மணல்தொட்டி/2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிர்ப்பொருள் ஒளிஉமிழ்தல்[தொகு]

    உயிரினங்களால் வெளியிடப்படும் ஒளிக்கு உயிர்ப்பொருள் ஒளி உமிழ்தல் என்று பெயர்.  இதனை வேதிப்பொருள் ஒளி உமிழ்தல் என்றும் கூறலாம்.  இது கடல்வாழ் முதுகெலும்பிகள், முதுகுநாணற்ற உயிரிகள், சில பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் மற்றும் நிலவாழ் முதுகு நாணற்ற உயிரிகளான மின்மினிப் பூச்சிகள் போன்றவற்றில் காணப்படுகிறது.  

ஒளி உமிழும் விதம்[தொகு]

    இந்த வேதிவினையில் ஒளியானது லுாசிபெரின் என்ற நிறமி லுாசிபெரேஸ் நொதியால் ஆக்ஸிஜனேற்றத்திற்கு உட்படும்போது வெளியிடப்படுகிறது.

சில உயிரினங்களில் லுாசிபெரின் வேதிப்பொருளிலிருந்து ஒளி வெளிப்படுவதற்கு கால்சியம், மெக்னீசியம் போன்ற துணைக்காரணிகள் தேவைப்படுகின்றன. மேலும் ஏ.டி.பி. மூலக்கூறும் தேவைப்படுகிறது.

பயன்கள்[தொகு]

    வெவ்வேறு இன உயிரிகளில் வெவ்வேறு வகையான லுாசிபெரேஸ் நொதி காணப்படுகிறது.  உயிரொளி உமிழ்தல் பண்பு ஆழ்கடலில் வாழும் உயிரினங்களில் அதிகம் காணப்படுகிறது.  இந்த உயிரினம் உமிழும் ஒளி அதற்குத் தேவையான உணவைக் கண்டறியவும், இனப்பெருக்கத்திற்கு அதன் துணையைக் கண்டறியவும் பயன்படுகிறது.