பயனர்:Arivazhagan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கை.அறிவழகன் (பிறப்பு: அக்டோபர் 21, 1974) வளர்ந்து வரும் புதிய தலைமுறை தமிழ் எழுத்தாளர்.

இளமைப் பருவம்[தொகு]

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இருக்கும் சிராவயல் மருதங்குடி என்கிற சிற்றூர் இவர் பிறந்த ஊர். தந்தையார் திரு.ச.கைவல்யம், தாயார் திருமதி.கலாவதி. மலேசியத் திராவிடர் கழகத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான திரு.சங்கரன் - அழகம்மாள் அவர்களின் பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். தற்பொழுது பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

இலக்கியப் பணி[தொகு]

தமிழின் புனைவு வரிசையில் தனது "முற்றத்து மரங்கள்" (தகிதா பதிப்பக வெளியீடு) என்கிற சிறுகதைத் தொகுப்பின் மூலம் அடி எடுத்து வைத்திருக்கும் ஆனந்த விகடனில் வெளியான இவரது "யாதும் ஊராகி, யாவரும் இல்லாது" என்கிற சிறுகதை பரவலாக வரவேற்பைப் பெற்றது மட்டுமன்றி தீவிர இலக்கியச் சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க இடம் பெறுகிறது. இவரது "கூலிக்காரப் பயலுக" சிறுகதைத் தொகுப்பு 2022 இல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. "மனித இனக்குழு வரலாறும், ஆரியமும்" நூல் திராவிட அரசியல் வரலாற்று நூல் வரிசையில் மிக முக்கியமான இடம் பெறுகிறது.

இவரது அரசியல் கட்டுரைகள் பல இணையதளத்தில் வெளிவந்துள்ளன. http://tamizharivu.wordpress.com என்னும் வலைப்பூவில் ஏறத்தாழ இருபத்தைந்து சிறுகதைகள், மூன்று நெடுங்கதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.

இவர் மூன்றாம் பாலின மனிதர்கள் குறித்த ஒரு நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arivazhagan&oldid=3449288" இலிருந்து மீள்விக்கப்பட்டது