பயனர்:பா.மகேஸ்வரன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:


ஆர்.ராமசுப்ரமணியன்

பிப்ரவரி 13,2015 எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான் தமிழ்,தெலுங்கு,மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு,தயாரிப்பு ,நிர்வாகம்,தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான் இந்தியா டுடே ,ஆரம்பித்து 25 வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தினார்.இதனை 9,000 ச அடிகள் கொண்ட அலுவலக கட்டிடத்தின் காவலாளி மிக கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார் . புகைப்படம் எடுக்கும் நிகழ்வு மட்டுமே ஓரளவுக்கு இறுக்கமான சூழ்நிலையை மாற்றியது .."நீங்கள் எல்லோரும் வேலையிலிருந்து வெளியேறினாலும் ,இப்பொழுது வரைக்கும் புகைப்படம் எடுப்பதிலேயே மிகவும் பிஸியாக இருக்கீங்க "என்றார் சென்னையின் முன்னணி தொலைக்காட்சி தொகுப்பாளர் பி.சி.சேகரன் மிக வெறுமையாக.

 இந்தியா டுடே தென்னக பதிப்பின் முன்னாள் இன்னாள் பணியாளர்கள்


திடீர் முடிவு:

           பிப்ரவரி 9 ,2015  இந்தியா டுடே குழுமத்தின் சீஃப் எக்சிகியூடிவ்  ஆபிசர் ஆஷிஷ் பக்கா  மனித வள அதிகாரிகள் குழுவுடன் சென்னை வந்தார்,ஊழியர்களுடனான கூட்டத்தில் மூன்று பதிப்புகளையும் மூடுவதாக அறிவித்தார்.20 ஆண்டுகளாக மூன்று பதிப்புகளும் நஷ்டத்தில் இயங்குவதாகவும் இந்தியா டுடே குழுமம் இனியும் இதனை தாங்கமுடியாது என்றும் கூறினார்,பிப்ரவரி 25க்கு விற்பனையாகும் கடைசி இதழ் என்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

பின்னர் எடிட்டர் இன் சீஃப்பும் ஸ்தாபகருமான அருண்பூரி ஊழியர்களுக்கு தனது இறுதி முடிவினை மின்ன்னஞ்சல் மூலமாக தெரிவித்தார். ஏப்ரல் 30 ல் இந்தியா டுடே குழுமத்தின் தென்னக அலுவலகம் அதே கட்டடத்தில் 6 500 சதுர அடியில் சிறிய எடிட்டோரியல் மற்றும் விற்பனை குழுவாக தொடர்ந்து செயல்படும் என்றார்.

       அருண்பூரி
                                         

செப்டம்பர் 2013 ,இதழின் முக்கிய அளுமைகள்,உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட சென்னை எடிட்டோரியல் சந்திப்பில் மூன்று இதழ்களும் முற்றிலும் பாதிப்பில் உள்ளன என்ற செய்தி வெளிப்படையான அறிவிப்பாக இருந்தது.இதனால் தெலுங்கு,மலையாள பதிப்புகளை மாத இதழ்களாக மாற்றப்படுவது என்ற முடிவினை பூரி மே 2014 பொது தேர்தல் வரை கிடப்பில் போட்டார். எனினும் 2014 செப்டம்பரில் நடைபெற்ற தில்லி எடிட்டோரியல் மீட்டிங்கில் தெலுங்கு ,மலையாளம் பதிப்புகள் மாத இதழ்களாக‌ மாற்ற இருந்தன என்ற அறிவிப்பு வந்தது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் பதிப்பை மாத இதழாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றே கூறப்பட்டு வந்தது.எனினும் பிப்ரவரி 9,2015 தமிழ் பதிப்பு மூடப்படுவதாக வந்த செய்தி ஏதிர்பாரததுதான்.

சாகசங்கள் நிறைந்த பயணம்:

        இந்தியா டுடே யின் முதல் தமிழ்பதிப்பு செப்டம்பர் 1989ல் வெளியிடப்பட்டது.அதிலிருந்து அது ஒரு நீண்ட ஆச்சரிய பயணமாகவே இருந்தது.அந்த காலம் மிக நன்றாக இருந்தன.நாங்கள் உணர்வுரீதியான வார இதழடன் ஒன்றிபோய் இருந்தோம் எனலாம்.

இரண்டு சுற்று இதழ்களுக்கு அடுத்ததாக முதல் இதழாக அம்பானி‍‍ நெய்வாஸ் வாடியா இடையேயான பிரச்சனை பற்றி அட்டைபடமாக வெளிவந்தது.

இந்தியா டுடே முதல் தமிழ் பதிப்பின் இதழ் செப் 5, 1989

90 களில் டெல்லி ஆங்கில பதிப்பை போலவே வார இருமுறை இதழாக மாற்றப் பட்டன.வார இதழாக மற்றப்பட்ட காலம் மிகவும் போரட்டமாக இருந்தது.தமிழ் எழுத்துருவை தேர்வு செய்வது மிகவும்

கடினமாக இருந்தது.வடிவமைப்பும் நிறைவற்று இருந்தன. ஆனால் 

உள்ளடக்கம் மற்றும் அச்சுமுறை உயர்ந்ததாக இருந்தது .இதழில் 6 பக்க செய்திக்கட்டுரையை 4 பக்கமாக மாற்றியமைப்பதே மிகப்பெரிய சாவலாக இருந்தது., நாங்கள் வடிவமைப்புக்காக மொழிபெயர்ப்பை இழந்தோம்.ஏனினும் நிலைமை காலப்போக்கில் மாற்றப்பட்டது என்கிறார் நாணா.

           என்.எஸ்.நாணா  இந்தியா டுடே தென்னகபதிப்பின் யின் டெபுடி ஆர்ட் டைரக்டராக பணியாற்றியவர்.தமிழ் பதிப்பின் லோகோ வை உருவாக்கியவர்

1989 முதல் 2002 வரையிலான காலகட்டம் ஆபூர்வமானது.ராஜிவ்காந்தி,வளைகுடா போர்,சோவியாத் யூனியன் பிளவு,பொருளாதார சீர்திருத்தங்கள்,ஜயின் கமிஷன் அறிக்கை வெளியீடு,ஐ.கே .குஜ்ரால் அரசு வீழ்ந்தது மற்றும் பி.ஜே.பியின் வளர்ச்சி என தமிழ் வாசகர்களுக்கு பெரும் தீனி போட்டது. ராஜ செங்கப்பாவின் போர் பற்றிய நேரடி அறிக்கைகள்,சேகர்குப்தாவின் சோவியத் யூனியன் பிரிவு பற்றிய கட்டுரைகள் தமிழ் வாசகர்களுக்கு உலக வரலாற்று நிகழ்வுகள் பற்றிய உணர்வை அறிய வைத்தன என்கிறார் நாணா. அப்போது தமிழக அரசியலிலும் கூட மிகவும் சுவராஸ்யமான காலமிது.ராஜிவ் காந்தி படுகொலை ,ஜெ.ஜெயலலிதாவின் வீழ்ச்சி மற்றும் கைது,சினிமாவில் ரஜினிகாந்தின் மிகப்பெரிய வளர்ச்சி,திமுக கட்சியில் பிளவு என வாசகர்களுக்கு சிறந்த தீனியாக இந்தியா டுடே தமிழ் அமைந்தது, இந்தியா டுடே தமிழ் பதிப்பு கவர்ஸ்டோரி வெளியிடுவதில் முன்னோடியாக திகழ்ந்த்து.கவர்ஸ்டோரிக்காக தரவுகளை பகுப்பாய்வு செய்தல், வரைபடங்கள்,பெட்டி செய்திகள்,தகவலகள்,புகைப்பட கட்டுரை ஆகியவற்றைக் கொண்டு கவர்ஸ்டோரி படைப்பதில் தமிழ்நாடு பதிப்பு முன்னோடியாக இருந்தது, அதன்பிறகே மற்ற சில தமிழ் பத்திரிக்கைகளும் இதே முறையை பின்பற்ற தொடங்கின எனலாம்.

தமிழ்நாடு உள்ளூர் செய்திகளை வெளியிடுவதில் பிரச்சனைகள் இருந்தன .முதல் இரண்டு செய்தி ஆசிரியர்கள் மாலன் ,வாஸந்தி இருவருமே இலக்கிய பின்புலம் கொண்டவர்கள் ஆனால் பத்திரிக்கையாளர்கள் அல்ல இது சில நன்மைகளை விளைவித்தாலும் கூட இதழ் தொடர்ந்து செய்தி இதழாக இருப்பதில் பாதிப்பையே ஏற்படுத்தின.இதழை உள்ளூருக்கு தகுந்தபடி மாற்றியமைக்கவில்லை .இதற்காக நான் தில்லி தலைமையுடன் முரண்பட்டேன்.நிலைமை மெல்ல பின்னர் மாறியது என்றாலும் தேசிய தரத்திற்கு உள்ளூர் செய்திகளை வெளியிட வலுவான காலச்சாரம் தோல்வியுற்றது என்கிறார் தமிழ் பதிப்பின் முன்னாள் இணை ஆசிரியர் ஆழி செந்திலநாதன்,ஏனினும் அந்த காலத்தில் தேசிய செய்திகள் 360 கோணத்தில் மிக அழமாக இருந்தன, தமிழ் இதழியலில் பத்தி எழுதும் முறையை கொண்டு வந்தது இந்தியாடுடே தான் என்கிறார் செந்தில்நாதன் தில்லி‍‍ தலைமையின் அணுகுமுறை:

இந்தியா டுடே தமிழ் இதழியலில் தொழிற்முறையை கொண்டுவந்தது,ஆனால் தமிழ்நாடு அளவிலான உள்ளூர் செய்திகள் பரவலாக இல்லாததால் தமிழ் வாசகர்களின் கண்களுக்கு அதன் தமிழ் பதிப்பு வேற்றுலக வாசியாக(ஏலியன்ஸ்) கருதப்படும் ஒரு விசித்திர சூழ்நிலையை உருவாக்கியது

ஒவ்வொரு செய்திகளுக்கும் தம்மாத்துண்டு செய்தி போட வேண்டும் என்றாலும் கூட தில்லி தலைமையின் உத்தரவு வாங்க வேண்டும் எனபது காட்டாயம்.2002 ல் ஆனந்த நடராஜன் எக்ஸிகியூடடிவ் எடிட்டர் ஆக பதவியேற்ற பின்னர் தான் நிலைமை மாற்ற ஒரு முயற்சி எடுக்கப்பட்டது என்கிறார்கள் சில முன்னாள் ஊழியர்கள்.


ஆனந்தநடராஜன்,ராமநாதபுரத்தை சேர்ந்தவர்,இந்தியா டுடே தமிழ் பதிப்பில் எக்ஸிகியூட்டிவ் எடிட்டராக 2002 முதல் 2013 வரை இருந்தவர்

அவர் உள்ளூர் செய்திகளை படைப்பதில் கவனம் செலுத்தினார். மேலும் சில புதிய பகுதிகளை தமிழிலுக்கு அறிமுகம் செய்தார்.துரதிருஷ்டவசமாக தில்லி தலைமையின் அனுசாரனை இல்லாததால் இயல்பான பத்திரிக்கையாளராகிய ஆனந்தநடராஜின் முயற்சிகள் தோல்விகண்டன. பெரும்பாலன நோக்கர்கள் தில்லி தலைமையே அதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்கின்றனர்.இதுவே ஒரு காலத்தில் விற்பனையில் 2.75 லட்சம் பிரதிகள் விற்ற தமிழ் பதிப்பை 24,000 பிரதிகளுக்குக கீழே இறங்கி வர காரணமாக இருந்தது.

இதழின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் சந்தைப்படுத்துதல்,விற்பனை,விளம்பரம் மற்றும் விநியோக பிரிவுகளில் காணப்பட்ட குறைபாடுகள் என்கிறார் பெயர் குறிப்பிட விருமபாத அதில் பணியாற்றிய ஒருவர். "எடுத்துக்காட்டாக சென்னையிலிருக்கும் பெரிய ஜவுளி பிராண்ட் இந்தியாடுடே தமிழ் பதிப்பில் விளம்பரம் செய்ய விரும்புகிறது என்றால் டெல்லியிலிருந்து அதற்கான அழைப்பை பெற வேண்டும் அதன்பிறகே அதன் இடம் பற்றிய போதனைகள் வழங்கப்படும். இப்படியா தொனியிலான காலவிரயத்தினால் விளம்பரதாரருடன் இணையும் திட்டத்தைனை முற்றிலும் கைவிட்டது.இதுவே பிராந்திய பதிப்புகளின் விளம்பர சந்தையினை அழித்தன என்கிறார் அவர்.

மேலும் சில நிறுவனங்கள் தமிழ் பதிப்பில் விளம்பரம் செய்ய முன் வந்தால் கூட அவர்கள் ஆங்கில பதிப்பிலும் விளம்பரம் செய்ய அழுத்தம் செய்யப்பட்டதால் தூரத்தி அடிக்கப்பட்டன.இது நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் குறிக்கோளுடான படுகொலை என கணக்கிடப்படுகிறது என்கிறார் அவர். அருண்பூரியை தவிர இந்தியா டுடே நிறுவனத்தில் யாருக்கும் பிராந்திய பதிப்புகளை விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்கின்றார் செந்தில்நாதன் இது "தலையில் இருந்த மீன் அழுக" என்பதற்கு சிறந்த உதாரணம் என்கிறார் அவர்


சென்னை அலுவலகம் 2012 மார்ச் ல் வாடகைக் கட்டைடத்திற்கு சென்றபோதே அதன் எதிர்காலம் என்னவென்று முன்கூட்டியே தெரிய ஆரம்பித்தது என்கிறார் செந்தில்நாதன்.அலுவலகம் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது 23 ஆண்டுகளின் மொத்த இதழ்களும் அவர்கள் பெற்றனர்.ஆனால் அதனை முழுவதுமாக நூலகத்திற்கே அளித்தனர்.மொத்த இந்தியா டுடே இதழ்களும் அதற்காக ஆதாரங்கள் 23 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் மற்றும் பிற துறைகளின் பதிவுகளாகும்,குகூள் ,மைக்ரோசாப்டின் மதிப்பின் படி பார்த்தால் 50 கோடிகள் தேரும்.ஆனால் அதனை நூலகத்திற்கே அளித்தனர்.நான் புல்லரித்துவிட்டேன் என்கிறார் செந்தில்நாதன். மேலும் அவர் இதழை இணையத்தில் தொழிற்நுட்ப ரீதியில் தரம் உய்ர்த்த மறுத்தலும் ஒரு பிரச்சனையாக இருந்தது என்கிறார்.தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் பதிப்புகளுக்கென்ற பிரத்யேக இணையதளங்கள் கிடையாது.இது ஊடகம் பிரிவு "டிஜிட்டலைசேசன்" நோக்கி முன்னேறுவதிலும் குழி பறித்தது. எனினும் 25 ஆண்டுகளாக சந்தையில் இருந்த இந்தியா டுடே அதன் பிராந்திய பதிப்புகளை தவிர்ந்திட எடுத்த முடிவு ஒரு பரிதாப நிலைதான் என்கிறார் செந்தில்நாதன்.

ரியல் எஸ்டேட்டாக பார்க்கும் நிலை:
 அருண் பூரிக்கு இந்தியா டுடெயின் தென்னக பதிப்புகளின் மீது  சில கனவுகள் இருந்தன.மூன்று பிராந்திய பதிப்புகளும் அவரின் செல்ல திட்டமாகும்.ஆனால் அவரின் அடுத்த தலைமுறையினருக்கு இதன் மீது ஈடுபாடோ ,காதலோ இல்லை.பூரிக்கு வயதாகிவிட்டது ,குடும்ப உறுப்பினர்கள் தந்த அழுத்ததின் காரணமாகவே அவர் இந்த முடிவுக்கு வந்தார் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத டெல்லி அலுவலத்தில் உள்ள மூத்த நிர்வாகிகளில் ஒருவர்.

பிர்லாவிடம் 26 சதவீத பங்குகள் கைமாறிய போது நிலைமை மோசமானது,பிர்லாக்கள் தந்த அழுத்தமும் காரணம்,ஆனால் அது ஒன்று மட்டும் அல்ல,பூரியின் அடுத்த தலைமுறையினரிடம் சிக்கிதவிக்கிற நிறுவனம் பிராந்திய பதிப்புகளின் சந்தை மேல் ஆர்வத்தை இழந்ததே காரணம் என்கிறார் மற்றொரு மூத்த நிர்வாகி.

                 அருண்பூரியுடன் குமார் பிர்லா மங்களம்

பூரியின் மகன் ஆங்கார்பூரி சென்னை அருகே மறைமலைநக‌ரில் உள்ள "தாம்சன் பிரஸ்" என்ற அச்சகத்தை நிர்வாகிப்பவர்.தாம்சன் பிரஸ் 18 ஏக்கரில் செயல்படுகிறது .இதன் மொத்த மதிப்பு 160 கோடி.அவர்கள் எந்த புது ஆர்டரையும் எடுப்பதில்லை. தென்னிந்தியாவிற்கான ஆங்கில இந்தியாடுடேவை அச்சிடவே பேணி வருகின்றனர்.இது பூரியின் மகனுக்கு எவ்வித அணைப்பை ஏற்படுத்த வில்லை.அங்கே ஓட்டுமொத்த தென்னிந்தியாவிற்குமான மொத்தம் 40,000 பிரதிகளே அச்சிடப்பட்டு வருகின்றன.இந்த அற்பமான பிரதிகள் பொருட்டு பெரிய அச்சகம் (சொத்து) தேவையில்லை என்றே கூறிவருகிறராம்.அவரின் கண்களுக்கு இதழியலை விட ரியல் எஸ்டேட் தெரிகிறது இன்று தரமான தமிழ் பத்திரிக்கைகளுக்கு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.குறுகிய காலத்தில் அவர்கள் மீண்டும் வந்தால் கூட இந்தியா டுடே அதன் இடத்தை நிச்சயம் பூர்த்தி செய்யும். "ஆமாம் நிச்சயமாக, ஆறு மாதத்திலோ அல்லது ஓராண்டு காலத்திலோ மீண்டும் ஆரம்பித்தால் கூட சந்தையை கைப்பாற்றுவார்கள் என்பது உறுதி ஏனென்றால் அவர்களுக்கு போட்டியாளர்கள் கிடையாது, யாரும் இந்தியா டுடே தரத்தினை ஈடு செய்ய முடியாது" என்கிறார் மூத்த ஆர்ட் டைரக்டர் என்.எஸ்.நாணா. இவைதான் "ஏன் இதழின் பழைய பணியாளர்கள் சென்னை அலுவலகத்திற்கு கடைசி நாளில் வந்தனர் என்பதற்கு இயல்பான காரணம்".அங்கே ஒரு நல்ல‌ பிராந்திய இதழியல் ஏக்கத்துடன் உள்ளது

ஆர்.ராமசுப்ரமணியன், பத்திரிக்கையாளர் இந்தியா டுடே தமிழ் பதிப்பில் முதன்மை செய்தியாளராக இருந்தவர். சஞ்சிகை இதழுக்காக‌ தமிழில்:பா.மகேஸ்வரன் தொடர்புக்கு:mahesasig@gmail.com