பயனர்:சுவாமி வித்தியானந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதர்வவேதம்---ஆத்மோபநிஷத்


1.புருஷன் மூன்றுவிதம், எங்கனமெனில் பாஹ்யாத்மா,அந்தராத்மா,பரமாத்மா,உணர்ச்சி தோல் மாம்ஸ்ம் ரோமம் முதலியவற்றுடன் கூடிய சரீரம் பிறக்கிறது இறக்கிறது. இது பாஹ்யாத்மா,கேட்பவனாகவும் முகர்பவனாகவும் ருசிபார்ப்பவனாகவும்.சிந்திப்பவனாகவும் அறிபவனாகவும் உள்ள விக்ஞானாத்மாவாகிய புருஷன் அந்தராத்மா,அழிவில்லாத அக்ஷரப்பொருள் பரமாத்மா.அதுதான் உபாஸிப்பதற்குரியது.

2.அது பிறப்பதில்லை, இறப்பதில்லை,உலர்வதில்லை,நனைவதில்லை,எரிவதில்லை,அசைவதில்லை,பிளக்கப்படுவதில்லை,வெட்டப்படுவதில்லை.குணங்களைக்கடந்து அனைத்திற்கும் ஸாக்ஷியாயிருக்கிறது.ஆத்மா எப்படும் அது மங்களமானது,சுத்தமானது எப்போதும் இரண்டற்ற ஒன்றேயாகி விளங்குவது,எங்கும் நிறைந்ததாக அந்த பிரம்மம் பிரகாசிக்கிறது.

3.இந்த ஆத்மா என்றும் உள்ளது. அது சுயம் பிரகாசமானது.அதற்கு எந்த தேவையும் இல்லை.அதே போல பிரம்மத்தையறிந்தவனுக்கு நான்பிரம்மம் என்று உணர வேறொன்றும் தேவையில்லை.பணம் இல்லாவிட்டாலும் அவன் எப்போதும் சந்தோஷமாக இருப்பான்.எப்போதும் திருப்தியுடன் இருப்பான்.உடல் இருந்தாலும் உடல் அற்றவன். அளவுடையவனாயினும் எங்குமுள்ளவன்.சரீரம் இல்லாத இந்த பிரம்மஞானியை வேண்டுதல் வேண்டாமை பற்றாது.

ஆத்மஞானி உடலோடு இருந்தாலும் உடலற்றவன்.பால் பாலில் கலப்பது போல ஆத்மஞானி ஆத்மாவில் ஒன்று கலக்கிறான். அறியாமையால் மதிமயங்கிய மக்கள் பிரம்மஞானியைின் தேகம் முதலிய தோற்றத்தைப்பார்த்து தேகம் உடையவன் என்று எண்ணுகிறார்கள். அந்த பிரம்மஞானி சாத்ஷாத் சிவனே.அவன் வாழும்போதே முக்தியை அனுபவித்தவன்.வாழும் போதே வாழ்க்கைப்பயனை எய்திய முக்தன் பிரம்மமாகவே இருக்கும் அவன் உடல் விழுந்தபிறகு இரண்டற்ற பிரம்மத்தில் லயிக்கிறான்.