பயனர்:சுவாமிநாதன்பாலசுப்பிரமணியன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

''''குமரன் உயர்நிலைப் பள்ளி. மஞ்சக்கொல்லை 'நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினத்திற்கு மேற்கே 4 கல் தொலைவில் மஞ்சக்கொல்லை என்னும் சிற்றுரில் குமரன் கோவில் என்று அழைக்கப்படும் வெற்றிவேலாயுதப் பெருமான் கோவிலுக்கு வடக்கே 1959 ஆம் ஆண்டில் சைவசமயக்காவலர் என்று போற்றப்படும் சிவத்திரு. இராம.சம்பந்தமுர்த்தி செங்குந்தரால் தோற்றுவிக்கப்பட்டது குமரன் உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியின் கட்டடத்தைக் கல்வி வள்ளல் அப்போதைய முதல்வர் கனம் கு.காமராசர் அவர்கள் அடிக்கல் நாட்டித் தொடங்கிவைத்தார் என்பது தனிச்சிறப்பு.

      இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியர் நாகப்பட்டினம் தேசிய உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றியவரான திரு. இராம.ந.குஞ்சிதபாதம் அவர்கள்.  பள்ளியின் தொடக்கக் காலத்திலேயே சான்றோர் இரா.ம.சம்பந்தமுர்த்தி அவர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப மிகச் சிறப்பாக வழிநடத்தி நாகப்பட்டினம் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளி என்னும் பெயரைத் தேடித்தந்தார். இந்த பகுதியில் பல்வேறு சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்து கல்வி பயின்று பெருமைபெற்றனர். கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் நகரங்களுக்குச் சென்று படிப்பதில் உள்ள சிரமங்களைக் கண்டு அதற்கு ஒரு மாற்றாக அமையவேண்டும் என்னும் எண்ணத்தில் எழுந்ததுதான் இப்பள்ளி. இப்பள்ளியில் கல்வி பயின்று பலரும் பல உயர்ந்த இடங்களில் பணியாற்றியுள்ளனர் - வருகின்றனர்.