பயனர்:சுவாமிநாதன்பாலசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். தமிழ் விக்கிபீடியா பக்கத்தில் என்னை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி. எனது பெயர் சு.பாலசுப்பிரமணியன். எனது தந்தையார் திரு.தமிழ்ப்புலவர் பா.சுவாமிநாதன். எனது தாயார் திருமதி சு.கமலாம்பாள். தஞ்சாவுர் மாவட்டம் திருவிடைமருதுர் எங்கள் சொந்தஊர். எனது பாட்டனார் புதுக்கோட்டை சமசுதானத்தில் கவிராயராக விளங்கியவர். க.சொ.பாலசுப்பிரமணியக் கவிராயர் என்பது அவர்கள் பெயர். பிறகு. திருவிடைமருதுரில் திருவாவடுதுறை ஆதின உயர்நிலைப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டபோது முதல் தமிழாசிரயராகத் திகழ்ந்தவர்கள். எனது தந்தையார் திருவாவடுதுறை ஆதின தொடக்கப்பள்ளியில் பணியைத் தொடங்கி அதன்பின் அரசுப்பணியில் தமிழாசிரியராகக் குத்தாலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியைத் தொடங்கி. திருத்துறைப்புண்டி. சுவாமிமலை. வைத்தீசுவரன்கோவில். திருபுவனம் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் முதனிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். எனது தந்தையாரின் நண்பர் கும்பகோணத்தில் இருந்த மஞ்சக்கொல்லை இராம.திருநாவுக்கரசு அவர்களின் பெருங்கருணையால் நான் மஞ்சக்கொல்லை குமரன் உயர்நிலைப்பள்ளியில் 6.10.1997 அன்றுமுதல் தமிழாசிரியராகப்பொறுப்பேற்று தற்போது இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். சைவஞ்சார்ந்த பணிகளில் ஈடுபாடு கொண்டவன். காரைக்கால் வானொலி நிகழ்ச்சியிலும் ஆலய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சைவமும் தமிழும் சிறக்க உரையாற்றுவதுண்டு. பட்டிமன்றங்களிலும் கருத்தரங்கங்களிலும் கலந்துகொள்வதுண்டு. நாகை மறைமலை என்னும் ஜேசிஸ் சங்கத்தின் சாசனத்தலைவராகப் பணியாற்றினேன். தமிழா இரத்ததான சேவைச் சங்கமத்தின் மூலம் இரத்ததான சேவையைச் சிறப்பாகச் செய்து வருகின்றேன். எனது சேவையைப் பாராட்டி ஜேசிஸ் சங்கம் நாகப்பட்டினம் ரோட்டரி சங்கம் ஆகியன சிறந்த ஆசிரியருக்கான விருதுகளை வழங்கிக் கெளரவித்துள்ளன. தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகளை எழுதிட ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் நாகப்பட்டினம் குருக்கத்தி டயட் பேராசிரியர் திரு. பிரகாஷ் அவர்களுக்கும் முதல்வர் திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கும் எனது நன்றி என்றென்றும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

நன்றி.