பயனர்:சந்துருபாஸ்கரன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                        வாழ்வின் எதிர் பிம்பம்- முதிர் கன்னிகள்

மனித வாழ்க்கை என்பது ஒரு வட்டம் போன்றது என்று எல்லோராலும் கூற கேட்ட நாம் அது வட்டமா அல்லது சதுரமா என்று இன்றுவரை யாரும் பார்த்ததும் கிடையாது. அதனை ஆராய்ந்ததும் கிடையாது காரணம் அதனை ஆராய்ந்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற அலட்சியம். இப்படிதான் இந்த ஆண்/பெண் உறவுகளும் வாழ்க்கை நடைமுறை செயல்பாடுகளும் இதற்கு ஒரு சான்றாக. ஆரம்ப காலத்தில் ஆண்கள் பெண்களின் பாதுகாப்பில்தான் இருதார்களாம். அவர்களுக்கு பெண்கள் அரவணைப்பை தவிர வேற எதுவும் தெரியாதாம். ஆனால் காலம் கடந்து வர வர பெண்கள் தமது நிலையில் இருந்து மாறி ஆண் ஆதிக்கத்திற்குள் வர ஆரம்பித்தார்கள் இதன் விளைவு இடைப்பட்ட காலத்தில் பெண்களை ஆண்கள் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இதன் விளைவு உடல் சுகத்திற்காகவும் தமது தேவைகளை தீர்த்து கொள்வதற்காவும் மட்டுமே பெண்களை பயன்படுத்தி கொண்டார்கள் இதனால் பெண்கள் தமது நிலைப் பாட்டினையும்,சுதந்திரத்தினையும் நிலைநாட்ட முடியாமல் போனது. இன்று அப்படி இல்லை பெண்களும் ஆண்களுக்கு நிகராக வளர்ந்து விட்டார்கள் என்பதை நம் கண்கூடாக பார்க்க முடிகிற்து. அனைத்து துறைகளிலும் பெண்கள் பங்களிப்பு என்பது சிறப்பாகவே உள்ளது என்பதை யாரலும் மறுக்க இயலாது. ஆனாலும் இந்த ஆணாதிக்கம் பல வழிகளில் பெண்களுக்கு இடர் பாடுகளை தந்துகொண்டிதான் இருக்கின்றன என்பதே உண்மை இதற்கு மற்றாக நமது நாட்டின் பெண்கள் மாறுநிலையாக மாறுவது முதிர்கன்னி என்னும் நிலை. முதிர்கன்னி என்றால் என்ன? இவர்கள் யார் முதிர்கன்னிகளாக ஏன் உருவம் பெறுகிறார்கள் என்ற பல கேள்விகளுக்கு அனைத்து தரப்பினரும் தரும் ஒரே விடை “வருமை” ஆகும்.

இந்த வறுமை என்பது பெரிய சக்தியா இதனை வெல்வது அவ்வளவு கடினமா ஏன் இதற்கு பெண்கள் மட்டும் பலியாகிறார்கள் என்ற பல கேள்விகள் நமது எண்ணத்தில் ஒடுகின்றன. இதற்கான பதிலை தேட நமது மனம் மறுக்கிறது.அப்படி தேடினால் பல உண்மைகள் வெளிவர தயங்குகின்றன.முதிர்கன்னிகளாக எப்படி இவர்கள் உருமாறுகின்றனர் என்றால் ஒவ்வொரு குடும்பத்தில் பிறக்கும் பெரும்பாலன முதல் பெண்க் குழந்தைகள் முதிர்கன்னிகளாக மாறுகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது. தமது குடும்ப சுழ்நிலை காரணமாக திருமண வயதை தாண்டியும் உழைக்கும் பெண்களே ஆவர். இந்த பெண்கள் தமது இன்ப துன்பகளையும் துறப்பதால் மன ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் பல வேதனைகளை அனுபவித்து அடிமாடுகளை போல் இரண்டாம் முன்றாம் தாரமாக சில ஆணதிக்க முதலைகளிடம் சிக்கி சீரழிகின்றனர். இறுதியில் இவர்கள் கனவுகள்,ஆசைகள் நொறுக்கப்பட்டு நாம் சிரித்தால் சிரிக்கும் அழுதால் அழும் கண்னாடி பிம்பத்தை போல் மாறுகிறார்கள். இவர்களை வாழ்வின் பிம்பத்தினை மெறுகேற்ற இந்த அரசு என்ன செய்ய போகிறது என்று வாழ்வின் விளிம்பில் ஏக்கத்துடன் உள்ளனர் இந்த் முதிர் கன்னிகள்.பாஸ்கரன்.சின்னதும்புர்