பப்பீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பப்பீர் (PubPeer) என்பது ஒரு வலைத்தளம் ஆகும். இது வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை, பயனர்கள் விவாதிக்கவும் மதிப்பாய்வு செய்யவும் அனுமதிக்கிறது. எனவே, இது ஆய்வுக்கட்டுரை வெளியீட்டிற்குப் பிந்தைய சக மதிப்பாய்வு தளமாச் செயல்படுகிறது.

இந்தத் தளம் ஒரு விமர்சனத் தளமாகச் செயல்படுகிறது. இத்தளம் பல உயர்மட்ட ஆவணங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியும், சில சந்தர்ப்பங்களில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளைத் திரும்பப் பெறவும் வழி வகுத்ததோடு அறிவியல் மோசடிகளையும் வெளிக்கொணர்ந்துள்ளது. இதனைத் திரும்பப் பெறுதல் வலைப்பூ குறிப்பிட்டுள்ளது.[1] பெரும்பாலான தளங்களுக்கு மாறாக, இது அநாமதேய வெளியீட்டிற்கு பிந்தைய கருத்துரையை அனுமதிக்கிறது. இது ஒரு சர்ச்சைக்குரிய அம்சமாகும். இதன் வெற்றிக்கான முக்கிய காரணியாக இதுவே உள்ளது. இதன் விளைவாக, பப்பீர் மீது சில பயனர்கள் அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.[2] இதற்கேற்ப இணையதளம் இப்போது வர்ணனையாளர்கள் பொதுவில் சரிபார்க்கக்கூடிய உண்மைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தது.[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பீர்&oldid=3626233" இருந்து மீள்விக்கப்பட்டது