பன்மை
Appearance
ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. பல பொருட்களைக் குறிப்பது பன்மை. [1] [2] உயர்திணையில் ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டும் ஒருமை. அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. உயர்திணையில் பலர்பாலைக் குறிக்கும் பெயர்ச்சொல் பன்மை. அஃறிணையில் 'கள்' என்னும் விகுதி பெற்று வரும் சொற்கள் பன்மை. கள்-விகுதி பெறாமல் வினைமுற்றால் பல-பொருளை உணர்த்தும் பன்மைகளும் உண்டு. இதனைப் பால்பகா அஃறிணைப் பெயர் என்பர்.
எடுத்துக்காட்டு
- மலர் விரிந்தது - இதில் 'மலர்' என்பது ஒருமை.
- மலர்கள் விரிந்தன. - இதில் 'மலர்கள்' என்பது பன்மை
அறுவகைப் பெயர்களில் பன்மை
[தொகு]பெயர் | ஒருமை | பன்மை |
---|---|---|
பொருள் | மலர் | மலர்கள் |
இடம் | மலை | மலைகள் |
காலம் | நொடி | நொடிகள் |
சினை | விரல் | விரல்கள் |
குணம் | அழகு | (பல்வகை) அழகு |
தொழில் | செலவு | செலவுகள் |