பன்னிரண்டு திராட்சைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரச இல்ல அஞ்சல் நிலைய கடிகார கோபுரம், மத்ரித்
பன்னிரண்டு திராட்சைப்பழங்கள் உண்ணத் தயாராக உள்ளன

பன்னிரண்டு திராட்சைகள் (Twelve Grapes; எசுப்பானியம். las doce uvas de la suerte", அதிர்ஷ்டத்தின் பன்னிரண்டு திராட்சைகள்") என்பது எசுப்பானிய மற்றும் போர்த்துகீசிய பாரம்பரியமாகும். இது புத்தாண்டை வரவேற்த் திசம்பர் 31 நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்குக் கடிகார மணி ஒலிக்கும் போது ஒவ்வொரு மணியோசைக்கும் ஒரு திராட்சையைச் சாப்பிடுவதைப் பாரம்பரியமாகக் கொண்டுள்ள நிகழ்வைக் குறிப்பதாகும். ஒவ்வொரு திராட்சையும் கடிகார மணியின் பன்னிரண்டும் ஒவ்வொரு ஆண்டிலும் உள்ள பன்னிரண்டு மாதங்களைப் பிரதிபலிக்கிறது.

இந்த பாரம்பரியம் குறைந்தபட்சம் 1895-ல்[1] தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் 1909-ல் மக்கள் மத்தியில் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த ஆண்டின் திசம்பரில், சில அலிகாண்டீசு திராட்சை வளர்ப்பவர்கள், அதிக எண்ணிக்கையிலான திராட்சைகளை விற்க இந்த வழக்கத்தை பரப்பினர். பாரம்பரியத்தின் படி, பன்னிரண்டு திராட்சைகளைச் சாப்பிடுவது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கிறது.[2] சில பகுதிகளில், இந்த நடைமுறை பொதுவாக மந்திரவாதிகள் மற்றும் தீமைகளை விரட்டுவதாக நம்பப்படுகிறது.[2][3] இருப்பினும் தற்பொழுது இது பெரும்பாலும் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கும் வரவேற்பதற்கும் ஒரு பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகிறது.

திராட்சைகளைச் சாப்பிட மக்கள் இரண்டு வகையான இடங்களில் மக்கள் கூடுகின்றனர். நோசெவிஜா இரவு உணவிற்குப் பிறகு இல்லங்களில் குடும்ப உறுப்பினர்கள் கூடி உண்கின்றனர். அல்லது நாடு முழுவதும் உள்ள முக்கிய சதுக்கங்களில் கூடுகின்றனர். இதில் முக்கியமானது மத்ரித் (இந்த பாரம்பரியம் எங்கிருந்து தொடங்கியது?). பன்னிரண்டு திராட்சைகள் புவேர்டா டெல் சோலில் உள்ள அரச இல்லா தபால் நிலைய கடிகாரத்துடன் நெருக்கமாகத் தொடர்புடையவை. இந்நிகழ்வு அனைத்து முக்கிய தேசிய தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வானொலி நிலையங்களில் ஒளி ஒலி பரப்பப்பட்டது. தொலைக்காட்சி ஒளிபரப்பு 1962-ல் தொடங்கியது.[4][5]

பன்னிரண்டு திராட்சைகள் எசுப்பானியம் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பரந்த கலாச்சார உறவைக் கொண்ட இடங்களிலும், [6] அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள ஹிஸ்பானிக் சமூகங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[7] இந்த பாரம்பரியம் ஹிஸ்பானிக் நத்தார் பண்டிகைகளின் ஒரு பகுதியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Edición de la mañana". 1 January 1896. http://hemerotecadigital.bne.es/issue.vm?id=0000410738. 
  2. 2.0 2.1 Spicer, Dorothy Gladys (22 February 2008). Festivals of Western Europe. BiblioBazaar. p. 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781437520163.
  3. McCann, Jim. Celebrations: a joyous guide to the holidays from past to present. Penguin Group (USA) Incorporated. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781557883735.McCann, Jim; Benedict, Jeanne (2001). Celebrations: a joyous guide to the holidays from past to present. Penguin Group (USA) Incorporated. p. 161. ISBN 9781557883735.
  4. "De campanadas en campanadas en TVE" (in ஸ்பானிஷ்). 26 December 2020. பார்க்கப்பட்ட நாள் 1 January 2022.
  5. Puelles (31 December 2019). "Historia de unas Campanadas: la retransmisión más tensa de la TV" (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 1 January 2022.
  6. "Por qué se comen 12 uvas a la medianoche y el origen de otras tradiciones de Año Nuevo en América Latina" (in es). https://www.bbc.com/mundo/noticias-america-latina-38374437. 
  7. Álvarez, Alex (27 December 2012). "15 Curious Latino New Year's Eve Traditions" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 January 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னிரண்டு_திராட்சைகள்&oldid=3857411" இலிருந்து மீள்விக்கப்பட்டது