பன்னாட்டு இந்தியப் பெருங்கடல் பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டு இந்தியப் பெருங்கடல் பயணம் (International Indian Ocean Expedition) என்பது 1959 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை இந்தியப் பெருங்கடலில் நடைபெற்ற ஒரு பெரிய அளவிலான பன்னாட்டு நீரியல் கணக்கெடுப்பு நடவடிக்கையாகும். இக்கணக்கெடுப்பில் 14 நாடுகளைச் சேர்ந்த 45 ஆராய்ச்சிக் கப்பல்கள் ஈடுபட்டன. கடல்சார் ஆராய்ச்சிக்கான அறிவியல் குழு இதற்கான நிதியுதவியை நல்கியது. பின்னர் அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையமும் நிதிநல்கையை செய்தது.[1][2][3] கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. உதாரணமாக, கடல் புழுக்களின் மாதிரிகள் இந்தியப் பெருங்கடலின் கடற்கரையிலிருந்து சேகரிக்கப்பட்டன.[4]

மேற்கோள்கள்[தொகு]