உள்ளடக்கத்துக்குச் செல்

பனி விடுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவீடனில் 2007இல் அமைக்கப்பட்ட ஒரு பனி விடுதியின் நுழைவாயில்.
Patrons at the ice bar at SnowCastle of Kemi, 2007

பனி விடுதி என்பது பனித்துகளைக் கொண்டும், பனிக்கட்டிகளைச் செதுக்கியும் உருவாக்கப்படும் ஒரு தற்காலிக விடுதி ஆகும்.[1] சாகசத்தையும் மாற்றத்தையும் விரும்புபவர்களுக்காக இவை அமைக்கப்படுகின்றன. இந்த விடுதிகள் உறைநிலைக்குக் கீழ் வெப்பநிலை உள்ள காலத்தில் பனித்துகளைக்கொண்டும், பனிக்கட்டிகளைக் கொண்டும் உருவாக்கப்படுகின்றன. இவை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் கட்டப்படுகின்றன. இது போன்ற விடுதிகள் பல நாடுகளில் உள்ளன. இவை வெவ்வேறு வகையான கட்டுமான பாணிகள், சேவைகள், வசதிகள் கொண்டவை. இவற்றில் பனி குடிப்பகங்கள், உணவகங்கள், தேவாலயங்கள் போன்றவையும் உண்டு.

விளக்கம்

[தொகு]

இந்த விடுதிகளில் தங்கும் பயணிகள் ஆர்வமாக புதுமைகளை விரும்புபவர்களாகவும், அசாதாரண சூழலில் இருக்க விரும்புபவர்களாகவும் இருப்பர்.[1][2] வாடிக்கையாளர்கள் பனிக்கட்டியால் செய்யப்பட்ட படுக்கைகளில் தூங்கத் தயாராக இருக்க வேண்டும். இவர்களின் உடல் வெப்பத்தை பாதுகாக்க, கம்பளிப் போர்வைகள் மற்றும் தூக்கப் பைகள் போன்றவை மிகுந்த குளிர்ந்த வெப்பநிலையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அறைகளில் வெப்பநிலை பூஜ்யம் செல்சியசுக்குக் கீழே இருக்கும். ஆனால், வெளிவெப்ப நிலையைவிட வெப்பமாக இருக்கும். ஒரு பனி விடுதியில் தங்கியிருக்க $ 300 முதல் $ 3,000 வரை செலவிட வேண்டியிருக்கும்.[2]

இவை பனி சிற்பங்கள் கொண்டதாகவும், உணவு மற்றும் பானங்கள் போன்றவை சிறப்பாக தேர்வு செய்யப்படும் விதத்திலும் இருக்கும்.[1] இங்கு பனிக்கட்டியால் செய்யப்பட்ட கோப்பைகள், உட்கார பனிப்பாள பெஞ்சுக்கள் போன்றவையும் கொண்டதாக இருக்கும்.[2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Andrews (1 June 2007). Introduction To Tourism And Hospitality Industry. Tata McGraw-Hill Education. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-066021-2.
  2. 2.0 2.1 2.2 Dallen Timothy; Victor Teye (26 October 2009). Tourism and the Lodging Sector. Routledge. p. 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-43398-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி_விடுதி&oldid=2747457" இலிருந்து மீள்விக்கப்பட்டது