பனி விடுதி (கியூபெக்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பனி விடுதி
Ice Hotel
பொதுவான தகவல்கள்
இடம்கியூபெக் நகரம், கியூபெக், கனடா
ஆரம்பம்சனவரி 1, 2001[1]
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை1
பிற தகவல்கள்
Number of rooms44
தரிப்பிடம்உள்ளது
இணையத் தளம்
hoteldeglace-canada.com

பனி விடுதி (கியூபெக்) ( Ice Hotel (பிரெஞ்சு மொழி: Hôtel de Glace) என்பது வட அமெரிக்க கண்டத்தில் உள்ள கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில், கியூபெக் நகரில் உள்ள முதல் மற்றும் ஒரே பனி விடுதி ஆகும்.[2]

வரலாறு[தொகு]

இந்த பனி விடுதி 2001 ஆம் ஆண்டு புத்தாண்டு தினம் அன்று திறக்கப்பட்டது.[1] இதை அதன் முதல் ஆண்டின்போது, கியூபெக் நகரின் புறநகரில் மோண்ட்மோரின்செ அருவி பூங்கா என்னுமிடத்தில் அமைக்கப்பட்டது.[1] அடுத்த ஆண்டு டுச்சிசெனரி விடுதிக்கு இது மாற்றப்பட்டது. இது 2002 இல் இருந்து 2010 வரை அங்கு செயல்பட்டது. 2011 ஆண்டு அங்கு கட்டப்பட்டிருந்த, விடுதியான டி க்லேஸ் செர்லெசுபோர்க் ஒட்டலுக்கு இடம் மாற்றப்பட்டது.[1] இந்த விடுதி கியூபெக் நகரில் இருந்து 5 கி.மீ வடக்கே அமைக்கப்படுகிறது. இதுதான் வட அமெரிக்காவின் முதல் மற்றும் ஒரே பனி விடுதியாகும். இது ஒவ்வோராண்டும் திசம்பர் மாதம் கட்டப்பட்டு சனவரி மாதம் திறக்கப்படுகிறது. இந்த பனிவிடுதியின் ஆயுள் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் வரை மூன்று மாதங்கள் ஆகும். அதன்பிறகு வெப்பத்தில் இது கரைந்துவிடும். அடுத்த ஆண்டு மீண்டும் கட்டப்படும். இது முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு திறந்து போது 11 இரட்டை படுக்கைகயறைகளுடன் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது 51 இரட்டை படுக்கையறைகளுடன் அமைக்கப்படுகிறது. அனைத்தும் பனிக்கட்டியால் அமைக்கப்பட்ட இந்த விடுதியில் தரை மரப்பலகையால் அமைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் வசதியான மெத்தை, தூக்கப் பை, படுக்கை விரிப்பு, தலையணைகள் போன்றவை அறைகளில் வழங்கப்படுகின்றன. கழிவறைகள் மட்டும் சூடான ஒரு தனிப்பட்ட அமைப்புடன் அமைந்துள்ளது. இந்த விடுதி ஒன்றரை மாதங்களில் 50 தொழிலாளர்களால் உருவாக்கப்படுகிறது. இந்த விடுதியைக்கட்ட ஒரு சிறப்புவாய்ந்த கலவையை பயன்படுத்தி அதன் சொந்தப் பனிக் கட்டிகள் கொண்டு கட்டப்படுகிறது. முதலில் உலோகச் சட்டங்களை தாங்கிகளாக பயன்படுத்தி கட்டப்பட்டு, பனிக்கட்டிகள் சில நாட்கள் கல்லாக உறைய அனுமதிக்கப்படுகிறது, பின்னர் தாங்கிகள் நீக்கப்படுகின்றன. விடுதி கட்ட 30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும் தேவைப்படுகின்றன. விடுதியின் சுவர்கள் நான்கு அடி தடிமன் கொண்டு உள்ளன.

பனி விடுதி திருமணக்கூடம், கியூபெக் (பெப்ரவரி, 2006)
அதே திருமணக்கூடத்தின் ஒரு தோற்றம்

சுற்றுலா தலம்[தொகு]

இந்த விடுதி ஒரு "சுற்றுலா தலம் " என விவரிக்கப்படுகிறது.[3] இதற்கு கியூபெக் சுற்றுலாத்துறையின் ஆதரவும் உள்ளது.[4] விடுதியில் சுற்றுலா வருபவர்களுக்கு ஆங்கிலம் மற்றம் பிரெஞ்சு மொழிகளில் சேவை வழங்கப்படுகிறன. கிழமையின் ஏழு நாட்களும் செயல்படுகிறது.[4] பதின்மூன்றாவது பருவத்தின் முடிவில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் 43,000வரை இரவு விருந்தினர்கள் வந்ததாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.[5] அதன் ஐந்தாவது பருவத்தில், 70,000 சுற்றுலா பயணிகள் வந்தனர்.[3]

திருமணங்கள்[தொகு]

இங்கு உள்ள ஒரு திருமணக்கூட தேவாலயத்தில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. 10 கனவு திருமணக்கூடங்களில் ஹோட்டல் டி க்லேஸ் இடம் பெற்றுள்ளது.[6] இங்கு பதின்மூன்றாவது பருவத்தின் முடிவில் 275 திருமணங்கள் நடத்தப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Business brisk at Quebec's 'ice hotel', CBC, January 2, 2001
  2. First Ice Hotel on Continent to Open in 2002, Akron Beacon Journal, December 24, 2000
  3. 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; CBS என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. 4.0 4.1 Visitors warming up to Quebec's ice hotel[தொடர்பிழந்த இணைப்பு], The Jamaica Observer, Tania Fuentez, May 25, 2003
  5. Ice Is Nice for a Winter Wedding, த நியூயார்க் டைம்ஸ், Susan Catto, December 19, 2004
  6. 10 dream wedding locations, Irish Independent, Ian McCurrach , May 27, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி_விடுதி_(கியூபெக்)&oldid=3370537" இருந்து மீள்விக்கப்பட்டது