பனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூசிலாந்தின் நேப்பியர் நகரத்தில் பனியாவின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளா ஒரு சிலை

பனியா ( Pania ) என்பது மாவோரி புராணங்களில் காணப்படும் ஒரு உருவம் ஆகும். நியூசிலாந்தின் நேப்பியர் நகரத்தில் பனியாவுக்கு ஒரு சிலை உள்ளது.

பனியா பற்றிய புராணக்கதை[தொகு]

நியூசிலாந்தின் வடக்குத் தீவின் கிழக்குக் கடற்கரையில் கடலில் வாழ்ந்த ஒரு அழகான கன்னிப் பெண்ணாவாள். பகல் நேரத்தில் இவள் தனது பாறை உலகின் உயிரினங்களுடன் நீந்தி வருவாள். ஆனால் சூரியன் மறைந்தவுடன் நேப்பியர் நகரத்தின் விரிகுடாவில் ஓடும் நீரோடைக்குச் செல்வாள். இவள் ஆளி புதர்களுக்கு இடையில் ஓய்வெடுக்கக்கூடிய ஒரு பகுதிக்கு ஓடை வழியாக பயணிப்பாள். பனியா ஓய்வெடுக்கும் ஓடையின் நீர் இனிமையானதாக இருந்தததால் மாவோரி தலைவரின் மிக அழகான மகனான கரிடோகி, ஒவ்வொரு மாலையும் தனது தாகத்தைத் தணித்துக் கொள்ள அங்கு வருகிறான். பல வாரங்களாக பனியா தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரியாது. ஒரு நாள் இரவு வரை அவள் மந்திரம் ஒன்றை சொல்கிறாள். அது கரிடோகியை காற்றில் பறக்கச் செய்கிறது. பின்னர் தனது மறைவிடத்திலிருந்து பனியா வெளிப்படுகிறாள்.[1]

காதல்[தொகு]

கரிடோகி , அழகான பனியாவை கண்டதும் காதலில் விழுகிறான். இவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொள்கின்றனர். இரவு நேரத்தில் பனியாவை கர்டோகி தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். இருட்டாக இருந்ததால் அவர்கள் உள்ளே நுழைவதை யாரும் பார்க்கவில்லை. சூரிய உதயத்தில், பனியா வெளியேறத் தயாரானாள். ஆனால் கரிடோகி அவளைத் தடுக்க முயல்கிறான். கடலின் ஒரு உயிரினமாக வாழும் பனியா கடலுக்குள் செல்லாவிட்டால் தன்னால் உயிர்வாழ முடியாது என்று அவள் விளக்கினாள். தான் தினமும் மாலை திரும்பி வருவேன் என்று உறுதியளித்து கடலுக்குத் திரும்பினாள்.

கரிடோகி தனது அழகான மனைவியைப் பற்றி தனது நண்பர்களிடம் பெருமையாகக் கூறுகிறான். அவர்கள் யாரும் அவளைப் பார்த்ததில்லை என்பதால் அவனை நம்பவில்லை. ஏனென்றால் . இதனால் விரக்தியடைந்த கரிடோகி கிராமத்தில் உள்ள கௌமாதுவா (புத்திசாலியான பெரியவர்) ஒருவரைக் கலந்தாலோசிக்கிறான். அவர் கடல் கன்னிகள் இருப்பதை அறிந்ததால் கரிடோகியை நம்பினார். ஒரு கடல் உயிரினமாக இருப்பதால், சமைத்த உணவை விழுங்கினால், பனியா கடலுக்குத் திரும்பச் செல்லமாட்டாள் என்று கரிடோகியிடம் கூறினார்.

அன்று இரவு பனியா உறங்கும்போது, கரிடோகி சமைத்த உணவை எடுத்து பனியாவின் வாயில் வைத்து விடுகிறான். அப்போது, ஓர் ஆந்தை உரத்த எச்சரிக்கை விடுக்கிறது. தூக்கத்திலிருந்து எழுந்த பனியா கரிடோகி தன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதால் திகிலடைந்து தப்பி ஓடி கடலுக்குள் சென்று விடுகிறாள். கரிடோகி கடலுக்குள் நீந்தி சென்று அவளைத் தேடுகிறான். ஆனால் அவன் அவளை மீண்டும் பார்க்க முடியவில்லை

இப்போது பாறையின் மேல் உள்ள தண்ணீருக்குள் ஆழமாகப் பார்க்கும்போது பனியா கைகளை நீட்டிய நிலையில் பார்க்க முடியும் என்று சிலர் கூறுகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "TE AO HOU The New World [electronic resource]". teaohou.natlib.govt.nz. பார்க்கப்பட்ட நாள் 2020-06-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனியா&oldid=3901731" இலிருந்து மீள்விக்கப்பட்டது