பனிக் கழித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனிக்கழித்தல் (Ice pruning)என்பது தாவரத்தின் காற்று வீசும் திசை நோக்கிய பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் கழிக்கப்படும் இயற்கையான தாவர அடர்த்தியைக் கழிக்கும் நடைமுறையாகும். இது காற்றில் அடித்துவரப்படும் பனி மற்றும் வீழ்பனித் துகள்களின் தாக்கத்தால் நடைபெறுவது. இந்நிகழ்வு சிலநேரம் வீழ்பனிக் கழித்தல் எனப்படுகிறது.[1] இந்தக் கழித்தல் நடைபெற இயல்பாக தாவரத்தின் பல வளர்ச்சிக் காலங்களில் தேவைப்படும். வீழ்பனிக் காலத்தில் மேலோங்கிய காற்றுகள் வீசும் திசை வின்ட்ரோஸ் வரைபடத்தில் உள்ளது போல, குறித்தவொரு ஒழுங்கில் அமைந்தால்தான் பனிக் கழிக்கப்பட்டத் தாவரத்துக்குத் தனித்துவமிக்க சமச்சீரற்ற தோற்றம் அமையும்.

உயர்ந்த மலைச்சரிவுகள் மற்றும் நிலநடுக்கோட்டிலிருந்து 50 பாகையளவுக்கு மேலமைந்த இடங்கள் போன்ற உயரமான இடங்களில் பனிக் கழித்தல் நடைபெறுகிறது. வட கனடாவில் கறுப்பு ஸ்புரூஸ் மரங்கள் அதிகம் காணப்படும் காடுகள் குறிப்படத் தகுந்த வகையில் பனிக் கழித்தல் செய்யப்பட்ட தனி மரங்களைக் கொண்டுள்ளன. .[2]

மேலும் காண்க[தொகு]

உப்புக் கழிப்பு

மேற்கோள்கள்[தொகு]

  1. William M. Marsh (1978) Environmental Analysis: For Land Use and Site Planning, McGraw-Hill, 292 pages பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-040490-9
  2. C. Michael Hogan, Black Spruce: Picea mariana, GlobalTwitcher.com, ed. Nicklas Stromberg, November, 2008 பரணிடப்பட்டது 2011-10-05 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிக்_கழித்தல்&oldid=3717047" இலிருந்து மீள்விக்கப்பட்டது