பத்தே பாபுராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்தே பாபுராவ் (11 நவம்பர் 1868 - 22 டிசம்பர் 1941) தமாஷா இசை நாடக வகையைச் சேர்ந்த ஒரு மராத்தி பாடகர் மற்றும் கவிஞர் ஆவார். [1] அவர் பல வாக்க்கள், பொது கருத்துக்களை கொண்ட நாடக மற்றும் நகைச்சுவையான நாடகங்களை இயற்றியுள்ளார். அவை அனைத்துமே பிரபலமாக இருந்தது. [2]

வாழ்கை வரலாறு[தொகு]

1868 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி, மஹாராஷ்டிராவில் உள்ள ரெத்தரேஹர்னாக்ஸில், சாங்லியில் [3] ஸ்ரீதர் பால்கிருஷ்ணா குல்கர்னியாக ஒரு மகாராஷ்டிர பிராமண குடும்பத்தில் பிறந்தார், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர் அழகான லாவனி நடனக் கலைஞரான பாவாலாவை மணந்து  மேலும் பிரபலமான கலைஞர்களில் ஒருவரானார். இவரது மனைவி பாவாலா பாய் சங்கன்மேனரில் உள்ள ஹிவர்காவ் பாவ்சாவை சேர்ந்தவர் ஆவார்.

1890 முதல் 1900 வரையிலான காலகட்டத்தில், பத்தே பாபுராவ் தமாஷா கலையின் மையத்தில் இருந்தார். அக்கால நாடகங்களின் தாக்கத்தில் பத்தே பாபுராவ் 'ரங்பாஜி' என்ற நாடகத்தை எழுதினார். 1914 மற்றும் 1918 க்கு இடையில், நாடகத் துறை பெரும் போர் மற்றும் தபசரி, மனச்சோர்வின் அலைகளால் தத்தளித்துக்கொண்டிருந்தது, அதே நேரத்தில், பல தாமசாகிகள் மகாராஷ்டிராவின் கிராம கண்காட்சிகள் மற்றும் யாத்திரைகளில் தமாஷாஸ் செய்து தங்களைத்  தாங்களே தாங்கிக் கொண்டனர். அவரது நினைவாக, பத்தே பாபுராவ் தெரு என்பது தெற்கு மும்பையின் ரெட்லைட் பகுதியில் உள்ள ஒரு தெருவுக்கு வழங்கப்பட்ட பெயர். பத்தே பாபுராவ் மார்க் (ஃபாக்லேண்ட் சாலை) மும்பை நகரத்தில் 0.75 கிமீ நீளத்திற்கு மும்பை மாவட்டத்தின் தார்டியோ, காமாதிபுரா, மும்பை சென்ட்ரல், கிராண்ட் சாலை பகுதிகளை இணைக்கிறது மற்றும் மும்பை மாநரத்திற்குள் உட்பட்ட துணை மாவட்டப் பகுதியில் உள்ளது. அவரைப்பற்றி ஒரு திரைப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. [4]

அவர் 22 டிசம்பர் 1941 இல் இறந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Caste Question: Dalits and the Politics of Modern India.
  2. History of Indian Theatre.
  3. "Patthe_Bapurao". aathavanitli-gani. Archived from the original on 5 August 2013. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013.
  4. "திறமையான தமாஷா கலைஞர் ஷாஹிர் பத்தே பாபுராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெள்ளித்திரையில்".
  5. "பத்தே பாபுராவ்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தே_பாபுராவ்&oldid=3667539" இலிருந்து மீள்விக்கப்பட்டது