உள்ளடக்கத்துக்குச் செல்

பதுக்கு நினைவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினியின் மைய முறைவழி அலகிற்குத் தேவையான தரவுகள் தற்போக்குப் பெறுவழி நினைவகத்தினூடாக செல்கின்றன. ஆனால், தற்போக்குப் பெறுவழி நினைவகம் மைய முறைவழி அலகிற்குத் தேவையான அளவு கதியில் தரவுகளை வழங்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதில்லை. இதற்குக் காரணம் தற்போக்கு பெறுவழி நினைவகத்தின் கதி மைய முறைவழி அலகின் கதியிலும் குறைவாக இருப்பதே ஆகும். இக்குறைபாட்டை தவிர்க்க பதுக்கு நினைவகம் (cache memory) பயன்படுத்தப்படுகிறது.

பதுக்கு நினைவகம் பிரதானமாக மூன்று வகைப்படும்.

  • முதல் பதுக்கு நினைவகம்
  • துணைப் பதுக்கு நினைவகம்
  • மூன்றாம் பதுக்கு நினைவகம்

முதல் பதுக்கு நினைவகம்

[தொகு]

உரிய மைய முறைவழி அலகினினுள்ளே முதல் பதுக்கு நினைவகம் அமைந்திருக்கும். அதன் கொள்ளளவு மிகச் சிறிய பெறுமானத்தைக் கொண்டிருக்கும். மைய முறைவழி அலகிற்குத் தரவுகளும் அறிவுறுத்தல்களும் தேவையான போது அவை இருக்கின்றனவா என்பது இம்முதல் பதுக்கு நினைவகத்தில் முதலில் தேடப்படும்.

துணைப் பதுக்கு நினைவகம்

[தொகு]

மைய முறைவழி அலகிற்கு மிக அண்மையில் தாய்ப்பலகை மீது பொருத்தப்பட்டுள்ள துணைப் பதுக்கு நினைவகம் முதல் பதுக்கு நினைவகத்திலும் கூடுதலான கொள்ளளவுடையது. அதேவேளை துணைப் பதுக்கு நினைவகம் செயற்படும் கதி முதல் பதுக்கு நினைவகத்தின் கதியிலும் குறைவானது.

மூன்றாம் பதுக்கு நினைவகம்

[தொகு]

நவீன கணினிகளில் மட்டுமே மூன்றாம் பதுக்கு நினைவகம் காணப்படும். இது தாய்ப்பலகையில் பொருத்தப்பட்டிருக்கும்.

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]

www.nie.lk/ebook/e10tim33.pdf பரணிடப்பட்டது 2012-01-31 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதுக்கு_நினைவகம்&oldid=3219564" இலிருந்து மீள்விக்கப்பட்டது