பதிமூன்று கண்ணறை பாலம்

ஆள்கூறுகள்: 8°58′03″N 77°05′27″E / 8.96738°N 77.09084°E / 8.96738; 77.09084
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதிமூன்று கண்ணறை பாலம்
Pathimoonnu Kannara Bridge
പതിമൂന്ന് കണ്ണറപ്പാലം
[[Image:
|px|alt=|பதிமூன்று கண்ணறை பாலம்
Pathimoonnu Kannara Bridge]]
புதுப்பிக்கப்பட்ட பின்னர் பாலத்தின் தோற்றம்
பிற பெயர்கள் 13 வளைவு பாலம்
போக்குவரத்து இந்திய இரயில்வே
தாண்டுவது கழுத்துருட்டியில் உள்ள பள்ளத்தாக்கு
வடிவமைப்பு வளைவுப் பாலம்
கட்டுமானப் பொருள் பாறைகள், சுண்ணாம்ப்புக் கற்கள் மற்றும் வெல்லம்
மொத்த நீளம் 102.72 மீட்டர்கள் (337.0 ft)
உயரம் 5.18 மீட்டர்கள் (17.0 ft)
கட்டுமானம் தொடங்கிய தேதி 1900
கட்டுமானம் முடிந்த தேதி 1903
அமைவு 8°58′03″N 77°05′27″E / 8.96738°N 77.09084°E / 8.96738; 77.09084

பதிமூன்று கண்ணறை பாலம் (Pathimoonnu Kannara Bridge) இந்தியாவில் கேரள மாநிலம் கொல்லம்-செங்கோட்டை இரயில் பாதையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பிரித்தானிய காலத்து கட்டமாகும். "13 வளைவுப் பாலம்" என்றும் இது அழைக்கப்படுகிறது,[1][2][3] கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கழுத்துருட்டியில் இப்பாலம் அமைந்துள்ளது.[4] இந்தியாவின் பழமையான மலை ரயில் பாதைகளில் ஒன்றான இந்த பாலம் 1904 ஆம் ஆண்டு கொல்லத்தில் இருந்து சென்னைக்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.[5] வெறும் பாறைகள், சுண்ணாம்புக்கல் மற்றும் வெல்லம் போன்ற பொருள்களைக் கொண்டு 13 வளைவுகளுடன் கட்டப்பட்டுள்ளது. இரண்டு மலைகளை இணைக்கும் இப்பாலம், சுமார் 100 அடி உயரமுள்ள பதின்மூன்று கிரானைட் தூண்களால் தாங்கப்பட்டுள்ளது.[6] ஒருபுறம் கழுத்துருட்டி ஆறு மற்றும் மறுபுறம் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை எண் 744 ஆகியவற்றால் இந்தப் பாலம் இணைக்கப்பட்டுள்ளது.

படக்காட்சி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The ancient heritage behind our railway bridges". Rediff.
  2. "Thenmala, India's First Planned Eco-Tourism Destination Is Full of Scenic Surprises". The better India.
  3. "Meter Gauge viaduct on the Quilon-Tenkasi line". Google Arts & Culture.
  4. "Lesser Known Kerala Mountain Railways: Treat for Nature Lovers!". Be on the road.
  5. "Vestibule between ages going out of view". The Hindu.
  6. "New train to Chennai to cut travel by 3 hours". Deccan Chronicle.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிமூன்று_கண்ணறை_பாலம்&oldid=3730522" இலிருந்து மீள்விக்கப்பட்டது