பதால பூதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பதால பூதேவி
Padala Bhudevi Nari Shakti Puraskar award (sq cropped).jpg
மார்ச் 2020இல் பூதேவி
பிறப்புபுது தில்லி, இந்தியா
தேசியம் இந்தியா
பணிஇயக்குநர், சமூக ஆர்வலர்
அறியப்படுவதுநாரி சக்தி விருது
பிள்ளைகள்மூன்று

பதால பூதேவி (Padala Bhudevi) இந்தியாவைச் சேர்ந்த இவர், தனது சவாரா சமூகப் பெண்களை தொழில்முனைவோராவதற்கும், அவர்களது குடும்ப உணவை மேம்படுத்தவும் உதவுகிறார். 2020 மார்ச்சில் இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

பூதேவி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தின் சீதாம்பேட்டை பகுதியில் வசிக்கும் சவாரா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். [1] இவர் தனது பதினொரு வயதில் திருமணம் செய்து கொண்டார். விரைவில் மூன்று மகள்களைப் பெற்றார். இவர் தனது புதிய குடும்பத்தினரால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார். இவரது கணவர் இவரை விட்டு வெளியேறினார். பின்னர், "ஆதிவாசி விகாஸ் அறக்கட்டளை"யை நடத்தி வந்த தனது தந்தையுடன் [2] சேர்ந்து 1984இல் அவருக்கு உதவ ஆரம்பித்தார். [3] 2000 ஆம் ஆண்டில் ஒரு தொழிலாளியாக பணிபுரிந்தார்.

பதால பூதேவி நாரி சக்தி விருதைப் பெறுகிறார்

தொழில் முனைவோராக[தொகு]

2013 ஆம் ஆண்டில் நெதர்லாந்து மற்றும் சீனாவுக்குச் சென்று அவர்களின் பயிரிடும் முறையைக் கொண்டு தங்கள் நிலங்களை மேம்படுத்துவது பற்றி ஆராய்ந்தார். [2] தற்போது இவர் இரண்டு நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார். ஒன்று தானியத்தை கையாளவும், மற்றொன்று விவசாயிகள் தங்கள் உற்பத்தியை செய்யவும் உதவுகிறது. [3] இவர் "ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனத்துடன்" (ஐ.டி.டி.ஏ) பணிபுரிந்தார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உணவை மேம்படுத்த அவர்களுக்கு உதவி வருகிறார். [4]

விருது[தொகு]

இவரது பணியினை அங்கீகரித்து மார்ச் 2020 இல் இவர் இந்தியாவில் பெண்களுக்கான மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடமிருந்து பெற்றார். [3] இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோதி பெண்கள் மற்றும் விதவைகளுக்கு ஒரு தொழில்முனைவோராக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக செயல்படுவதை பாராட்டினார். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதால_பூதேவி&oldid=3116306" இருந்து மீள்விக்கப்பட்டது