பண்பாட்டு உலகமயமாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வணிகக் கண்காட்சியின் ஓவியம், எசியன் நாட்டுப்புற விழா, 1887, லூயி தோசாண்ட் (1826–1887).

பண்பாட்டு உலகமயமாதல் அல்லது கலாச்சார உலகமயமாதல் (cultural globalisation) என்பது சமூகங்களுக்கிடையேயான கலாசார விடயங்களை உலகம் முழுவதும் பரப்பும் மற்றும் விரிவாக்கும் செயற்பாடு ஆகும்.[1] இதன் மூலம் உணவு, உடை, பழக்கவழக்கங்கள், விழுமியங்கள், மொழி போன்ற பல்வேறுபட்ட கலாசார அம்சங்கள் புகுத்தப்படுகின்றன. நவீன உலகில் இணைய வசதிகள், பரவலான பண்பாட்டு ஊடகங்கள், சுற்றுலாப் பயணங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் இளைஞர்களிடையே வேறுபட்ட கலாசார நுகர்விற்கும், பரவல்களுக்கும் உந்துசக்தியாகக் காணப்படுகிறது. இதன் மூலமாக தனிப்பட்டவர்கள் தமது பிராந்திய எல்லைகளைைக் கடந்து சமூகத் தொடர்புகளை மேம்படுத்த வழிவகுக்கின்றது.[2] மறுபுறம் கலாசார உலகமயமாக்கல் கலாசார பல்வகைமைக்கு பாதகமானது என்ற விவாதமும் முன்வைக்கப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு நாடும், சமூகமும் தமக்கே உரிய கலாசார பண்புகளைக் கொண்டு காணப்படும். இது "நாட்டுப்புற கலாசாரம்" என்றழைக்கப்படுவதுடன் இவை அந்நாட்டின் அல்லது மக்களின் கடந்தகால மற்றும் தற்கால வாழ்க்கை முறை, அவர்களின் வரலாறு, பண்பாட்டு அம்சங்கள் என்பனவற்றின் பிரதிபலிப்பாகும். பொதுவாக உலகமயமாக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர்களாக அபிவிருத்தி அடைந்த நாடுகளும் அவர்களின் முகவர்களும் செயற்படுவதனால் பொதுவாக மேலைநாட்டுக் கலாசாரங்களின் தாக்கம் உள்ளூர் கலாசார பழக்கவழக்கங்களுக்கு பெரும் சவாலினை ஏற்படுத்துவதுடன் காலப்போக்கில் கலாசாரங்கள் அழிவடைந்து போகக்கூடிய நிலைமையும் காணப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Manfred Steger; Paul James (academic) (2019). Gllobalization Matters: Engaging the Global in Unsettled Times. Cambridge: Cambridge University Press. https://www.academia.edu/43249323. ;Aditya, Sarthak (2006). Transport,Geography, Tribalism. London: Aditua Publications. https://www.academia.edu/1642214. 
  2. Manfred B. Steger and Paul James, ‘Ideologies of Globalism’, in Paul James and Manfred B. Steger, eds, Globalization and Culture: Vol. 4, Ideologies of Globalism, Sage Publications, London, 2010. download pdf https://uws.academia.edu/PaulJames Inda, Jonathan; Rosaldo, Renato (2002). "Introduction: A World in Motion". The Anthropology of Globalization. Wiley-Blackwell. 
  3. அலிகான், எம் (இலங்கை புவியியலாளர் சங்கம்). "பூகோளமயமாக்கம்". புவியியல் சஞ்சிகை 1: 17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பாட்டு_உலகமயமாதல்&oldid=3692774" இலிருந்து மீள்விக்கப்பட்டது