பணத்தாள்கள் சேகரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பணத்தாள்கள் சேகரிப்பு என்பது ஒரு உலகளாவிய பொழுதுபோக்காகும். பணத்தாள் சேகரிப்பாளர்கள் நாடுவாரியாக பணத்தாள்களை சேகரிப்பது, குறிப்பிட நில அமைப்பின் படி பணத்தாள்களை சேகரிப்பது, விலங்கு, பறவை படமிட்ட பணத்தாள்களை சேகரிப்பது என்பதாக நிறைய வேறுபாடுகளுடன் சேகரிக்கின்றார்கள்.

பணத்தாள் சேகரிப்பின் வகைகள்[தொகு]

தலைப்பு வாரியான பணத்தாள் சேகரிப்பு[தொகு]

பணத்தாள்களில் தலைவர்கள், விலங்குகள், பறவைகள் போன்றவை இடம்பெறுகின்றன. பணத்தாள் சேகரிப்பாளர்கள் குறிப்பிட்ட தலைவர்களின் படமிட்ட பணத்தாள்களை சேகரிப்பது, குறிப்பிட்ட விலங்குகளின் படமிட்ட பணத்தாள்களை சேகரிப்பது என்பதில் ஆர்வமாக உள்ளார்கள்.

காலம்[தொகு]

இந்திய பிரித்தானிய ஆட்சியின் போது வெளியிட்ப்பட்ட 5 ரூபாய் பணத்தாள்

பணத்தாள்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் வெளிவந்த பணத்தாள்களை மட்டும் சேகரிப்பது இவ்வகையாகும். உதாரணத்திற்கு இந்தியா பிரித்தானியர்களால் ஆளப்பட்ட போது வெளியிடப்பட்ட பணத்தாள்களை மட்டும் சேகரித்து வைப்பது. இந்த சேகரிப்பில் ஒரு பணத்தாளின் ஆண்டு வாரியான சேகரிப்பு உள்ளது.

நாடு[தொகு]

ஒரு குறிப்பிட்ட நாட்டின் அனைத்து பணத்தாள்களையும் சேகரிப்பது இவ்வகையாகும். உதாரணமாக இந்திய நாட்டின் பணத்தாள்களை மட்டுமே சேகரிப்பது.

மூலக்கூறின் அடிப்படையில் சேகரிப்பது[தொகு]

உலகம் முழுவதும் காகிதத்தில் அதிகளவு பணத்தாள்களை வெளியிட்டாலும், பாலிமர், பிலாஸ்டிக் போன்ற மூலக்கூறுகளிலும் பணத்தாள்களை வெளியிடுகிறார்கள். அவற்றில் பாலிமரில் வெளியிடப்பட்ட பணத்தாள்களை சேகரிப்பது போன்றவை இந்த வகையாகும்.

வரிசை எண்[தொகு]

பணத்தாள்களின் எண்ணிக்கையை அறிவதற்காக அச்சகங்கள் பணத்தாள்களில் வரிசை எண்ணை இடுகின்றன. சில பணத்தாள் சேகரிப்பாளர்கள் இந்த வரிசை எண்ணில் சிலவற்றை மட்டும் சேகரிக்கும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக இந்தியப் பணத்தாள்கள் 6 இலக்க வரிசை எண்ணை பெரும்பாலும் கொண்டிருக்கின்றன. அந்த 6 இலக்கத்தின் முன்பு 3 இலக்கத்தில் ஆங்கில எழுத்துகளோ எண்களோ இடம்பெறுகின்றன.

  1. பொதுவாக 6 இலக்க எண்களே அச்சடிக்கப்படும், 1 000 000 என்ற எண் மட்டும் விதி விலக்காக பணத்தாள்களில் அச்சடிக்கப்படுகிறது. இந்த எண் உள்ள பணத்தாள்களை மட்டும் சேகரிப்பவர்கள் உள்ளனர். மிக அரிதாக கிடைக்கும் ஒரு ரூபாய் தாள்கள், பழைய 100 நூறு ரூபாய் தாள்களில் இந்த எண் இருந்தால் கூடுதல் சந்தை மதிப்பினைப் பெறுகிறது.
  2. ஒரே எண்ணை கொண்ட பணத்தாள்கள். (உதா - 111111, 666666)
  3. பாலின்ரோம் எண்கள் (உதா - 654456, 123321)
  4. ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை எண்கள் (உதா - 234567, 654321)
  5. புனித எண்கள். (உதா 214-RAM,786 -ISLAM,541- SAI)
  6. சில பணத்தாள் சேகரிப்பாளர்கள் 144 - ஊரடங்கு, 143 - I LOVE YOU என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கை, 916 - தங்கத்தின் மதிப்பை கூறும் எண் என்பதைப் போன்றும் சேகரிக்கிறார்கள். இவை தவிற 14 14 14 என்பதைப் போன்று தொடர்ச்சியாக வருகின்ற எண்களை சேகரிப்போரும் உள்ளனர்.

வரிசை எண் அடிப்படையில் பணத்தாள்களை சேகரிப்போர்கள் தங்களுக்கென ஒரு பாணியை வரையறை செய்து சேமிக்கத் தொடங்குகிறார்கள். இதனால் பணத்தாள் சேகரிப்பில் வரிசை எண்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

வடிவமைப்பு மாற்றம்[தொகு]

பாதுகாப்பு காரணம் கருதியோ, சில எழுத்துகளை மாற்றம் செய்தோ பணத்தாள்களை அரசு வெளியிடும். அந்த மாற்றங்களை காணுவதற்காக பணத்தாள்களை சேகரிக்கும் வழக்கமும் உள்ளது.

நட்சத்திர குறி வரிசை எண்கள்[தொகு]

அச்சிடும் போது ஏற்படுகின்ற பிழையால் சில பணத்தாள்களை அச்சகங்கள் மீண்டும் அச்சிடுகின்றன. [1]அவ்வாறு மீண்டும் அச்சடிக்கப்படும் பணத்தாள்களில் உள்ள வரிசை எண்ணில் நட்சத்திரக் குறி இணைக்கப்படுகிறது. இவ்வாறான நட்சத்திரக் குறியிட்ட பணத்தாள்களை சில சேகரிப்பாளர்கள் விரும்பி சேகரிக்கின்றனர்.

கவனர் கையெழுத்து[தொகு]

இந்திய பணத்தாள்களில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரின் கையெழுத்து காணப்படுகிறது. பணத்தாள்களை சேகரிப்போர் குறிப்பிட்ட கவர்னரின் கையெழுத்திட்ட பணத்தாள்களை மட்டும் சேகரிப்பது(முதல் கவர்னரின் கையெழுத்துள்ள 5,10,50,100 ரூபாய் தாள்களை சேகரிப்பது), குறிப்பிட்ட பணத்தாளில் கவர்னர்களின் கையெழுத்து வாரியாக சேகரிப்பது (முதல் கவனரிலிருந்து தற்போது உள்ள கவனர் வரை கையெழுத்திட்ட 5 ரூபாய் தாளை மட்டும் சேகரிப்பது) ஆகிய இரு வகை சேமிப்பினை சேமிப்பாளர்கள் கொண்டுள்ளார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. https://www.mintageworld.com/story/detail/46-Types-of-Fancy-Number-Currency-Notes/

வெளி இணைப்புகள்[தொகு]

தகவல்கள்
நிறுவனங்கள்