பட்டவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டவன் என்பவர் இந்து சமய நாட்டார் தெய்வமாவார். எண்ணற்ற கோயில்களின் பரிவாரத் தெய்வமாகவும், சில கோயில்களில் மூலவராகவும் பட்டவன் இருக்கிறார். இந்தப் பெயர் பொதுவாக இறந்தவர்கள் அனைவரையும் குறிக்க பயன்படுத்துவதால் எண்ணற்ற இடங்களில் தங்களின் மூதாதையர்களை பட்டவன் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

சொல்லிலக்கணம்[தொகு]

காட்டுப்புத்தூர் அத்தனூர் அம்மன் கோவிலில் உள்ள பட்டவன் சிலை மற்றும் பதிவு

பட்டவன் என்ற சொல் பொதுவாக இறந்தவர்களின் நினைவாக வைத்து வணங்கப்படும் சிலைகள் அல்லது கற்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த வகை வழிபாடுகள் நடுகல் வழிபாட்டின் கீழ் வருவன. பயிர்களை அழிக்கும் விலங்குகளையும், மனிதர்களை தாக்க வந்த விலங்குகளையும் எதிர்த்து போராடி இறந்தவர்களுக்கு அவர்களின் நினைவாக நடுகற்களை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

பட்டவன் என்ற சொல்லை பட்டான் என்றும் வழங்குகின்றனர். புலியால் இறந்தவனை புலிகுத்தி பட்டான்[1] என்றும், பன்றியால் இறந்தவனை பன்றிக் குத்தி பட்டான் என்றும் அழைக்கின்றனர். இந்த வகை நடுகற்களில் புலியை கொல்வதைப் போலவும், பன்றியைக் கொல்வதைப் போலவும் மனித உருவை செதுக்கியுள்ளனர்.

  • புலிக் குத்தி பட்டான் [2][3]
  • பன்றிக் குத்தி பட்டான்
  • முயல் குத்தி பட்டான்
  • யானைக்குத்தி பட்டான்
  • பாம்புகடித்துப் பட்டான்

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.dinamani.com/edition_coimbatore/article951167.ece?service=print பல்லடத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க "நடுகல்' கண்டுபிடிப்பு தினமணி ஆகஸ்ட் 13, 2009
  2. "பழநி அருகே நடுகல் கண்டுபிடிப்பு | Dinamalar". www.dinamalar.com.
  3. "பழநி அருகே நடுகல் கண்டுபிடிப்பு| Dinamalar". www.dinamalar.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டவன்&oldid=3716985" இலிருந்து மீள்விக்கப்பட்டது