படுஜாயா தொல்லியல் தளம், மேற்கு ஜாவா

Batujaya, Karawang | |
---|---|
ஆள்கூறுகள்: 6°18′0″S 107°0′0″E / 6.30000°S 107.00000°E | |
Country | இந்தோனேசியா |
Province | West Java |
படுஜாயா Batujaya என்பது இந்தோனேஷியாவில் மேற்கு ஜாவாவில் கரவாங் என்னுமிடத்தில் உள்ள படுஜாயா என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் துறையினரின் தளம் ஆகும். இந்தத் தொல்லியல் தளமானது பகுதி ஐந்து சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் குறைந்த பட்சம் 30 கட்டுமான உனூர் (மணல் குன்றுகளில் மீது பரவலாக கலைப்பொருட்கள் உள்ள இடம்) [1] அமைப்புகள் காணப்படுகின்றன. அவ்விடங்களில் கலைப்பொருள்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. உனூர் என்பது இந்தோனேசியாவில் சுமத்ராவில் ஜம்பி பகுதியில் அமைந்துள்ள மௌரா ஜாம்பி தொல்லியல் தளத்தில் ஒத்த நிலையில் அமைந்துள்ளதாகும்.
உனூர்[தொகு]
1984 ஆம் ஆண்டில் இந்தோனேசியா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இந்த இடம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு அந்த இடத்தில் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. அகழ்வாராய்ச்சியின்போது உனூர் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 17 உனூர்கள் இருந்தன. அவற்றில் மூன்று குளங்களின் அமைப்பினைக் கொண்டிருந்தன. அங்கு செங்கற்களால் கட்டப்பட்ட கட்டட அமைப்புகள் காணப்பட்டன. அவை களிமண் மற்றும் அரிசி உமிகள் (வஜ்ரா-லெபா) ஆகியவற்றால் செய்யப்பட்ட செங்கற்களால் ஆகும். அங்கு மீட்கப்பட்ட இரண்டு கட்டட அமைப்புகள் கோயில்களின் வடிவத்தினை ஒத்து அமைந்துள்ளன, அவற்றில் ஒன்று ஜீவா கோயில் என அழைக்கப்படுகிறது. ஜீவா கோயில் பின்னர் புதுப்பிக்கப்பட்டு, பழைய இயல்பு நிலைக்கு கொணரப்பட்டது. பண்டுங் தொல்பொருள் அமைப்பின் தலைவர் டாக்டர் டோனி ஜுபியான்டோனோவின் கூற்றுப்படி, ஜீவா கோயில் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.
உள்ளூர் இந்தோனேசிய அரசாங்கங்கள் இந்த தளத்தை பராமரிக்காத நிலையில், ஃபோர்டு அமைப்பு அதன் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மானியங்களின் ஒரு பகுதியாக படுஜாயா வளாகத்தின் ஆராய்ச்சி மற்றும் அகழ்வாராய்ச்சிக்கு நிதி உதவியினை வழங்கி வருகிறது.[2]
கோயில் எச்சங்கள்[தொகு]
இந்தோனேசியாவின் பழமையான இந்து- பௌத்த இராச்சியமான தருமநகரத்தின் இருப்பிடம் போல இந்த தொல்பொருள் இடத்தின் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. மேற்கு ஜாவாவில் பண்டைய கோயில் எச்சங்கள் காணப்படவில்லை. இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்பாக, மேற்கு ஜாவாவில் நான்கு கோயில் தளங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை கருட் பகுதியில் உள்ள கங்குவாங் கோயில், ரோங்ஜெங் கோயில், பாமரிக்கன் கோயில் மற்றும் சியாமிசில் உள்ள பனஞ்சங் கோயில் ஆகியனவாகும்.
ஜீவாவில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கால ஆய்வின்போது அங்கு ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்த கோயில் கட்டப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான பூசைக்குரிய பொருள்கள், கல்வெட்டுகளுடன் கூடிய சிறிய களிமண் மாத்திரைகள் மற்றும் பிரார்த்தனையில் பயன்படுத்தப்படும் புத்தரின் படங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.. இந்தோனேஷியா பல்கலைக்கழகத்தில் ஒரு மூத்த மனிதவியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் டாக்டர் புதியர்தோனா என்பவர் இந்தப் பொருள்களின் மகரந்தத்தூளியல் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். பண்பாடு தொடர்பான ஆவணங்கள், மற்றும் உணவு வகைகள் தொடர்பான சான்றுகள் போன்றவையும் நோக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
புனி பண்பாடு[தொகு]
இந்த இடத்திலும் இதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் புனி பண்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள களிமண் மட்பாண்டங்களின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புனி பண்பாடு என்பதானது வரலாற்று முந்தைய காலத்திய களிமண் பாண்டங்கள் செய்வத தொடர்பான பண்பாடாகும். இது மேற்கு ஜாவா வடக்கு கடற்கரையில் பரவியிருக்கும் புனி வரலாற்றுக்கு முந்தைய களிமண் கலாச்சாரம் பதுஜயா தளத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது.
கோயிலின் சில தளம் மற்றும் பிற பகுதிகளுடன் கட்டுமானத்திற்காக வளர்ந்த நிலையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதை அறியமுடிகிறது. தரை தளத்தின் சில பகுதிகளும், கோயிலின் சில பகுதிகளும் பளிங்கு அளவிலான கற்கள் வலுவூட்டப்படாத கான்கிரீட் ஆகியவற்றால் கடினப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் சில கோயில்கள் தடிமனான ஸ்டக்கோவுடன் பூச்சும் அதில் காணப்படுகின்றன.[3]
ஏப்ரல் 2019 ஆம் நாளன்று, இந்த வளாகம் இந்தோனேசிய தேசிய கலாச்சார புதையலாக அறிவிக்கப்பட்டது.[4]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Candi Batujaya Dibangun dengan Teknologi Canggih" இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 25, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170825010615/http://www.pikiran-rakyat.com/node/127026.
- ↑ The Jakarta Post பரணிடப்பட்டது ஆகத்து 17, 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Wah, Teknologi Beton Dikenal Sejak Zaman Tarumanegara". June 3, 2012 இம் மூலத்தில் இருந்து January 28, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130128125526/http://www.mediaindonesia.com/read/2012/06/03/323664/291/7/Wah-Teknologi-Beton-Dikenal-Sejak-Zaman-Tarumanegara.
- ↑ "Batujaya Temple complex listed as national cultural heritage". April 8, 2019. https://www.thejakartapost.com/life/2019/04/06/batujaya-temple-complex-listed-as-national-cultural-heritage.html.
வெளி இணைப்புகள்[தொகு]
- ஸ்பைஸ் தீவுகள் வரலாறு
- பாம்பாங் புடி உட்டோமோ. 2004. அர்சிதேக்தூர் பங்கூனன் சுசி மாஸா இந்து-புத டி ஜாவா பாரத் . கெமென்ட்ரியன் கெபுடயான் டான் பரிவிசாதா, ஜகார்த்தா. ISBN 979-8041-35-6 ஐஎஸ்பிஎன் 979-8041-35-6
- பெர்காண்டியன் பட்டுஜயா, இந்தோனேசிய விக்கிபீடியாவிலிருந்து 19 செப்டம்பர் 2005 அன்று.