படி முடிச்சு
படி முடிச்சு (அல்லது) ரீஃவ் முடிச்சு Reef knot | |
---|---|
பெயர்கள் | படி முடிச்சு (அல்லது) ரீஃவ் முடிச்சு Reef knot, சதுர முடிச்சு |
வகை | கட்டுவதற்கு |
செயற்றிறன் | 48% |
மூலம் | பழங்காலம் |
தொடர்பு | திருடன் முடிச்சு, பாட்டி முடிச்சு, துன்ப முடிச்சு |
அவிழ்ப்பு | Jamming |
பொதுப் பயன்பாடு | ஒரு கயிற்றின் இரண்டு நுனிகளையும் இணைத்து ஏதாவது ஒரு பொருளைக் கட்டுவதற்குப் பயன்படும். |
எச்சரிக்கை | இது பாதுகாப்பான தொடுப்பு வகை முடிச்சு அல்ல. ஒரு நுனியைப் பிடித்து வெளிப்புறமாக இழுத்தால் இம்முடிச்சு கழன்றுவிடும் வாய்ப்பு அதிகம். இரண்டு கயிறுகளும் ஒரே தடிமன் இல்லாவிடில் இம்முடிச்சு சரியாக பிடிப்பு கொண்டிருக்காது. |
ABoK |
|
படி முடிச்சு அல்லது படி முடிச்சு (reef knot) என்பது ஒரே தடிப்புள்ள இரண்டு கயிறுகளைப் பிணைக்க பரவலாகப் பயன்படுத்தும் ஓர் எளிய முடிச்சு. ஆனால் கவனமாக இடவேண்டிய முடிச்சு.
படி முடிச்சு போட இடப்புறம் உள்ள கயிற்றில் ஒரு நுனி முடிச்சும், வலப்புறம் உள்ள கயிற்றில் ஒரு நுனி முடிச்சும் இடவேண்டும். இடப்புறம் உள்ள கயிற்றின் நுனியும் (செயல் முனையும்), நிலை முனையும் ஆகிய இரண்டும் கண்ணியின் ஒரே பக்கத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். வலப்புறம் உள்ள கயிற்றின் நுனியும் (செயல் முனையும்), நிலை முனையும் ஆகிய இரண்டும் கண்ணியின் ஒரே பக்கத்தில் இருந்து வெளிப்பட வேண்டும் ஆனால் அது இடப்புற கயிற்றுக்கு எதிர்த் திசையில் (மேல்-கீழ்) இருக்க வேண்டும். படத்தில் சிவப்பு முனைகள் நீலக் கண்ணிக்கு மேல் புறமாகவும், நீல கயிற்றின் முனைகள் சிவப்புக் கண்ணிக்குக் கீழ்ப்புறமாகவும் இருப்பதைப் பார்க்கலாம். இம் முடிச்சில் இரண்டு நுனிகளும் (செயல் முனைகளும்) ஒரே பக்கமாக இல்லாவில் இது திருடன் முடிச்சு என்னும் வேறொரு முடிச்சாகிவிடும்.
பயன்பாடுகள்
[தொகு]படிமுடிச்சு ஒரே தடிமன் உள்ள இரண்டு கயிறுகளை இணைக்கப் பயன்படும் ஒரு முடிச்சு. இம்முடிச்சை சரியாக இட்டால், முடிச்சு பெரும்பாலும் நகராது. இம் முடிச்சை துணி போன்றவற்றில் இடும்பொழுது தட்டையாக படிந்து இருக்கும். இம் முடிச்சை காயம் பட்ட புண்களுக்கு இடும் கட்டுகளுக்கு மிக நெடுங்காலமாகப் பயன்பட்டு வந்திருகின்றது. காலணிகளின் பூட்டுக்கயிறுகளைப் பிணைக்கவும், அழகுபடுத்து முகமாகவும் இடும் முடிச்சுகளிலும் இது பயன்படுகின்றது.
ஆங்கிலப் பெயர் ரீஃவ் (Reef) என்பது பாய்மரப் படகுகளில் பாயை திருப்பி காற்றுத் தடுப்பைக் குறைக்கும் செயலுக்குக் ரீஃவ் என்று பெயர். அச் செயலுக்கு இம் முடிச்சுப் பயன்படுவதால் ரீஃவ் முடிச்சு என்று பெயர் பெற்றது.
முறையற்ற பயன்பாடு
[தொகு]இம்முடிச்சு பரவலாக அறியப்ப்ட்டாலும், பார்ப்பதற்கும் கட்டுவதற்கு எளிதாக இருந்தாலும், வலுவான பாதுகாப்பான முடிச்சு அல்ல. உலகெங்கும் உள்ல சாரணர்களுக்கும் பரவலாக கற்பிக்கப்படுகின்றது. அனைத்துலக உறுப்பினர் பட்டையத்திலும் காணப்படுகின்றது. ஆனால் இரண்டு கயிறுகளை இணைக்க இம் முடிச்சைப் பயன்படுத்தக் கூடாது என்று அனைத்துலக முடிச்சுகள் குழுமம் பரிந்துரைக்கின்றது. இதற்கு மாறாக இரண்டு கயிறுகளை இணைக்க இரட்டை மீனவர் முடிச்சைப் பயன்படுத்த வேண்டும். இந்த படி முடிச்சை தவறாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் காயங்களின் எண்ணிக்கை மற்ற எல்லா முடிச்சுகளாலும் ஏற்பட்டதை விடக் கூடுதலானது என்று சில முடிச்சுகள் பற்றிய வழிகாட்டு நூல்கள் கூறுகின்றன [1] மேலும் இந்த முடிச்சை பாதுகாப்பு இல்லாத பாட்டி முடிச்சு என்னும் முடிச்சோடும் குழப்பிக்கொள்ளவும் வாய்ப்பு அதிகம்.
தொடர்பான முடிச்சுகள்
[தொகு]-
Reef (square) knot
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cassidy 1985, The Klutz Book of Knots