உள்ளடக்கத்துக்குச் செல்

படிவரை தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் நிறப் படிவரை தாள் சுருள்.

படிவரை தாள் (tracing paper) என்பது ஒரு வகை ஒளிகசியவிடும் தாள் ஆகும். இது, நல்ல தரமான தாள்களைச் சல்பூரிக் அமிலத்தில் சில செக்கன்கள் அமிழ்த்தி எடுப்பதன் மூலம் செய்யப்படுகிறது. அமிலம், தாளில் உள்ள செலுலோசின் ஒரு பகுதியை, ஊன்பசை இயல்பும் ஊடுசெல்லவிடாத் தன்மையும் கொண்ட அமிலோயிட் வடிவத்துக்கு மாற்றுகிறது. இத்தாளை நன்றாகக் கழுவி உலர்த்திய பின்னர் உண்டாகும் தாள் முன்னைய தாளிலும் வலிமை கொண்டதாக இருக்கும். படிவரை தாள்கள், எண்ணெயால் பாதிக்கப்படுவதில்லை என்பதோடு, பெருமளவுக்கு நீர், வளிமம் போன்றவற்றை உட்புகவிடுவதும் இல்லை.


இத்தாளைப் படம் அல்லது வரைபடம் ஒன்றின்மீது வைத்து வரைவதன் மூலம் படியெடுக்கப் பயன்படுவதால் இது படிவரை தாள் எனப்படுகிறது. படம் ஒன்றின்மீது படிவரை தாளை வைக்கும்போது அதனூடாகக் கீழேயுள்ள படம் ஓரளவு தெளிவாகத் தெரியுமாதலால், அவ்வாறு தெரியும் படத்தில் உள்ள கோடுகளைப் பின்பற்றிப் படிவரை தாளின்மீது வரைந்து அப்படத்தைப் படிவரைதாளில் படியெடுக்க முடிகிறது. தூய செலுலோசு இழை ஒளிகசியவிடும் தன்மை கொண்டது. இழைகளுக்கு இடையில் வளி இருப்பதனாலேயே சாதாரண தாள் ஒளி புகவிடாத் தன்மை கொண்டதாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிவரை_தாள்&oldid=3476754" இலிருந்து மீள்விக்கப்பட்டது