பங்கஜ் சிங் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கஜ் சிங்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
In office
மார்ச் 2022
தொகுதிநொய்டா
In office
11 மார்ச் 2017 – மார்ச் 2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 திசம்பர் 1978 (1978-12-12) (அகவை 45)
மேதினிநகர் பாலமு மாவட்டம், சார்க்கண்டு[1]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சுசுமா சிங்
பெற்றோர்(s)ராஜ்நாத் சிங் (அப்பா)
சாவித்ரி சிங் (அம்மா)
முன்னாள் கல்லூரிமகாநகர் ஆண்கள் இடைநிலைக் கல்லூரி
தயால் சிங் கல்லூரி
அமிதி வணிக பள்ளி
இணையத்தளம்Pankaj Singh

பங்கஜ் சிங் (Pankaj Singh)(பிறப்பு: டிசம்பர் 12, 1978) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

அரசியல்[தொகு]

பங்கஜ் 2002 முதல் அரசியலில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இவர்நொய்டாவின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2] உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்கு மார்ச் 2017 அன்று, நடைபெற்ற தேர்தலில் நொய்டா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் துணைத் தலைவராக உள்ளார். இவர் இந்தியாவின் தற்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங்கின் மூத்த மகன் ஆவார்.

பங்கஜ் சிங் 2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் நொய்டா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]

இளமை மற்றும் கல்வி[தொகு]

தாக்கூர் பங்கஜ் சிங் 2001-ல் அமிட்டி நொய்டாவில் வணிக மேலாண்மை முதுநிலைப் பட்டம் பெற்றார்.[4], முன்னதாக 1996-ல் இலக்னோவின் மகாநகர் ஆண்கள் இடைநிலைக் கல்லூரியில் மேல்நிலை கல்வியினை முடித்தார். பின்னர் 1999-ல் தயால் சிங் கல்லூரியில் இளம் வணிகவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

குடும்ப வாழ்க்கை[தொகு]

தாக்கூர் பங்கஜ் சிங், இந்தியத் துப்பாக்கி சுடும் வீராங்கனையான சுஷ்மா சிங்கை நவம்பர் 2004-ல் மணந்தார்.[5] இவர் நாராயண் சிங் ராணாவின் மகள் மற்றும் ஜஸ்பால் ராணாவின் சகோதரி ஆவார்.[6] இவர்களுக்கு ஆர்யா வீர் என்ற மகனும் தியா என்ற மகளும் உள்ளனர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About Thakur Pankaj Singh". https://www.pankajsingh.in/about.html. 
  2. "UP BJP". http://www.dnaindia.com/india/report-rajnath-singh-s-son-elevated-3-angry-up-bjp-secretaries-quit-1641006. 
  3. https://results.eci.gov.in/ResultAcGenMar2022/ConstituencywiseS2461.htm?ac=61
  4. "Pankaj Singh(Bharatiya Janata Party(BJP)):Constituency- NOIDA(GAUTAM BUDDHA NAGAR) – Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2020-10-14.
  5. [1]Sushma Rana
  6. [2]Narayan Singh Rana
  7. Rajnath Singh’s son Pankaj has assets of Rs 47 lakh, doesn’t own a house.

வெளி இணைப்புகள்[தொகு]