பங்கஜ் ஆசுவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பங்கஜ் ஆசுவால் (Pankaj Oswal) இவர் ஓர் இந்தியத் தொழிலதிபராவார். இவர் பர்ரப் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமாக இருந்தார். இது ஆத்திரேலியாவின் பெர்த்தை தளமாகக் கொண்ட நிறுவனமாகவும், உலகின் மிகப்பெரிய திரவ அமோனியா உற்பத்தி நிறுவனங்களிலும் ஒன்றாகும். [1] ஆசுவாலுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்து உள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பங்கஜ் இந்தியாவில் வளர்ந்து மணிப்பால் தொழில்நுட்பக் கழகத்தில் படித்தார். பட்டம் பெற்ற பிறகு, இவர் தனது தந்தையின் பல நிறுவனங்களில் பணியாற்றினார். [2] இவர் ராதிகா என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். [3]

சர்ச்சை[தொகு]

தனியார் ஜெட் விமானங்கள், படகுகள், சொகுசு கார்கள் மற்றும் பெர்த்தில் உள்ள சுவான் ஆற்றில் ஒரு 'தாஜ்மகால்' கட்டியமைத்தல் ஆகியவற்றுக்கு நிதியளிப்பதற்காக பர்ரப் ஹோல்டிங்சிடமிருந்து 150 மில்லியன் டாலர் மோசடி செய்ததாக பங்கஜ் மற்றும் இவரது மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டது. அனைத்து வழக்குகளும் 2016 இல் இவர்களுக்கு சாதகமான முடிவாக வந்தன.

2016 ஆகத்தில், பங்கஜ் மற்றும் ராதிகா ஆசுவால் ஆகியோர் தங்கள் பர்ரப் உர வணிகம் தொடர்பாக ஏஎன்இசட் வங்கிக்கு எதிரான வழக்கைத் தீர்த்துக் கொண்டனர்.

தாங்கள் இந்தியவைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் ஏஎன்இசட் ஊழியர்கள் தங்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக ஆசுவால்கள் குற்றம் சாட்டியிருந்தனர். [4] ஏஎன்இசட்டின் முன்னாள் தலைமை அதிகாரி கிறிஸ் பேஜ் தன்னை உடலால துன்பப்படுத்தியதாகவும் தங்கள் பங்குகளை விற்க கையெழுத்திடுமாறும் கட்டாயப்படுத்தினார் என்றும் ஆசுவால் குற்றம் சாட்டினார். இது இவர்களின் பங்குகளை கட்டாயமாக விற்க வழிவகுத்தது. [5] திருமதி ஆசுவால் தானும் தனது கணவரும் சிறைக்குச் செல்லவேண்டும் என்றும் உத்தரவாதத்தில் கையெழுத்திடாவிட்டால் தங்களது குழந்தைகள் அனாதைகளாக ஆவார்கள் என்று மிரட்டியதாகவும் ஏஎன்இசட்டின் தலைமை சட்ட ஆலோசகர் மீது குற்றம் சாட்டினார். [6]

திரு மற்றும் திருமதி ஆசுவாலுக்கு பர்ரப் உர வணிகத்தை கையகப்படுத்தியதற்காக ஏஎன்இசட் ஒரு வெளியிடப்படாத தொகையை வழங்கியது. [7]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கஜ்_ஆசுவால்&oldid=3010853" இருந்து மீள்விக்கப்பட்டது