பக்ரேசுவர் நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பக்ரேசுவர் நதி
River
நாடு இந்தியா
மாநிலங்கள் சார்க்கண்ட், மேற்கு வங்காளம் Bengal
நகரம் பக்ரேசுவர்
அடையாளச்
சின்னம்
பக்ரேசுவர் அனல்மின் நிலையம்

பக்ரேசுவர் நதி (Bakreshwar River) என்பது மயூராக்சி நதியினுடைய ஒரு துணை ஆகும். இந்நதி சார்க்கண்ட் மாநிலத்தின் பர்கனா கோட்டத்தில் உற்பத்தியாகிறது [1]. பின்னர் இது பிர்பூம் மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து கோபாய் நதியை சந்திக்கிறது. இவ்விரு நதிகளிலிருந்தும் தண்ணீர் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள மயூராக்சி நதியில் ஒருங்கிணைந்து பாய்கின்றன [2]. பனாகர்-மார்கிராம் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது ஒருவர் தப்ராய்பூர் தாண்டி சிறிது தொலைவில் இடப்புறம் திரும்பினால் பக்ரேசுவர் அனல்மின் நிலையத்தை அடையலாம். இதற்கான அணை பெயர் நீல்நிர்யான் ஆகும். இவ்விடம் ஒரு சுற்றுலாத் தலமாக பிரபலபடைந்துள்ளது [3]. அனல்மின் நிலையம் சின்பாய் கிராமத்திற்கு அருகில் உள்ளது.

நீர்ப்பாசனம்[தொகு]

பக்ரேசுவர் கால்வாய் நீர்ப்பாசன வசதியை அளிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Selim, Mohammad, Irrigation Projects in Birbhum District,Paschim Banga, February 2006, (in Bengali), Birbhum special issue, p. 151, Information and Culture department, Govt. of West Bengal
  2. "Birbhum District". District Administration. மூல முகவரியிலிருந்து 20 February 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-02-18.
  3. Sarkar, Joydeep, Paryatan Boichitre Birbhum Jela, Paschim Banga, p. 200

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்ரேசுவர்_நதி&oldid=2377908" இருந்து மீள்விக்கப்பட்டது