பக்த துருவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்த துருவன்
இயக்கம்பி. வி. ராவ்
தயாரிப்புஏஞ்சல் பிலிம்ஸ்
நடிப்புசி. எஸ். ஜெயராமன்
பி. எஸ். சிவராமலிங்கம் பிள்ளை
சி. எஸ். கோபாலகிருஷ்ணன்
சி. எஸ். சமன்னா சுந்தரம்
பி. எஸ். சிவபாக்கியம்
எஸ். ஆர். ஜானகி
வெளியீடு1935
ஓட்டம்.
நீளம்17000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

பக்த துருவன் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 17000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். ஜெயராமன், பி. எஸ். சிவராமலிங்கம் பிள்ளை மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

உபத் தகவல்[தொகு]

பின்னணிப் பாடகர் சி. எஸ். ஜெயராமன், குழந்தை நடிகராக நடித்த இப்படத்தில், ‘இனிய கான சினிமா ராணி’ பி.எஸ். சிவபாக்கியம் குறத்தியாகவும், முதன்முதலில் ஒரே படத்தில் பல வேடங்களில் நடித்த பி.எஸ். சாமண்ணா அய்யர் குறவனாகவும் நடித்துள்ளார்கள். ‘பச்சை சிகப்பு மிச்சம் கருப்புப் பாசியிருக்குது, பாசி கோர்க்கும் ஊசி இருக்குது, நரிக்கொம்பிருக்குது, பெரிய வரிப்புலி நகமிருக்குது, நம்ம புள்ளைக்கு வாங்கிப் போட்டா நல்லாருக்குமே,’ என்றும், ‘பச்சைக் குத்த ஆசை உமக்கில்லீங்களா’ என்னும் பாடலை சிவபாக்கியம் பாடியிருக்கிறார்.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Bhaktha Dhuruvan ( 1935 )". tamilrasigan.net. 2016-10-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தினமலர் 'நிழலல்ல நிஜம்' – 28". www.dinamalarnellai.com (தமிழ்). 2017-04-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-10-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_துருவன்&oldid=3714650" இருந்து மீள்விக்கப்பட்டது