பக்கப் பரப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரிக்கப்பட்ட நேர்வட்ட உருளையின் பக்கப்பரப்பு

ஒரு பொருளின் பக்கப் பரப்பு (lateral surface) என்பது அப்பொருளின் அடி மற்றும் மேல் பக்கங்கள் தவிர்த்த பிற பக்கங்களின் பரப்பினைக் குறிக்கும்.

ஒரு கனசதுரத்தின் பக்கப்பரப்பு என்பது அதன் நான்கு பக்கங்களின் பரப்பாகும். :கனசதுரத்தின் பக்க அளவு = எனில் அதன் ஒரு பக்கத்தின் பரப்பு:

Aface = a ⋅ a = a2.

எனவே கனசதுரத்தின் பக்கப்பரப்பு:

a ⋅ a ⋅ 4 = 4a2.
  • ஒரு பட்டகத்தின் பக்கப்பரப்பினை அதன் அடிப்பக்கத்தின் சுற்றளவு மற்றும் உயரத்தின் பெருக்கற்பலனாகக் கணக்கிடலாம்.[1]
  • ஆரம் r, உயரம் h கொண்ட நேர்வட்ட உருளையின் பக்கப்பரப்பு:
A = 2πrh.
  • ஒரு பிரமிடின் பக்கப்பரப்பானது அதன் அடிப்பக்க முக்கோணம் தவிர்த்த இதர பக்க முக்கோணங்களின் பரப்புகளின் கூடுதலாகும்.
  • ஒரு கூம்பின் பக்கப்பரப்பு
கூம்பின் ஆரம்; சாய்வு உயரம்; உயரம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Geometry. Prentice Hall. 2007. பக். 700. https://archive.org/details/isbn_9780131339972. 

மேலதிக வாசிப்புக்கு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கப்_பரப்பு&oldid=3583471" இலிருந்து மீள்விக்கப்பட்டது