பகுப்பு பேச்சு:Wikipedia license migration candidates

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் படிமம் தற்போது இங்கு பொதுவகத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. அது இன்னும் சிறப்பாக அமைய எனது எண்ணங்கள் வருமாறு;-

  1. பொதுவகத்தின் இப்பதிவேற்ற முறையை ஒருமுறை பார்த்துக் கொள்ளவும். நானும் சில கோப்புகளை அவ்விதம் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மாற்றி உள்ளேன்.
  2. {{PD-user|...}} என்ற உரிமம் அளிக்கப்படும் போது, மற்றவை தேவையில்லை என்றே கருதுகிறேன். மேலும் இதுபோன்ற உரிமத்தை உடைய கோப்புகள் 99%எந்தவித உரிமத்தொந்தரவையும் சந்திப்பதில்லை. இத்தகைய உரிமத்தை அளிப்பதில் பெரும்பாலோருக்கு உடன்பாடு இருக்கும். கருத்து வேறுபாடு தோன்றினாலும், அவர் எப்பொழுது வேண்டுமானாலும் வேண்டும் உரிமத்தை மாற்றிக் கொள்ளலாம். எனவே, பதிவேற்றப்போகும் பகுப்பிலுள்ள அனைத்து கோப்புகளையும், இக்குறிப்பிட்ட உரிமத்தோடு மாற்றலாம். இது குறித்த ஒரு அறிவிப்பை ஒரு மாதகாலத்திற்கு, ஆலமரத்தடியில் இட்டு விடலாம்.
  3. This file is lacking source information. என அங்கு வருகிறது. அவ்விடத்தில், From ta:w:பகுப்பு:Wikipedia license migration candidates
  4. இங்கு பதிவேற்றப்பட்ட தேதியையும் குறிப்பிட வேண்டுகிறேன்.
  5. பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள் என்பதை விட பகுப்பு:பொதுவகத்திற்கு நகர்த்தப்பட்ட படிமங்கள் என்று இருந்தால் தெளிவாகப் புரியும். இப்பொழுதுள்ள பெயர் காமன்சில் இருக்கும் அனைத்துப் படிமங்களையும் குறிக்கிறது.

மற்றவை தங்கள் பார்வை கண்டு..--≈ உழவன் ( கூறுக ) 02:47, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி, நாம் மாற்றப் போகும் பகுப்பில் உள்ளவையை யாரேனும் முன்பு சோதனையிட்டு தகுதியுடையவையா என உறுதி செய்யப்பட்டதா? இது பற்றி பொதுவகத்தில் கேட்டுள்ளனர். நீங்கள் source information ஆக கொடுத்திருக்கும் பகுப்பு/தகவலின் பொருள் என்ன? மற்ற பரிந்துரைகளைச் சேர்த்துக் கொள்கிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 16:34, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
source information என்பதில் இங்குள்ள மூலக்கோப்பின் பக்கத்தைத் தரவேண்டும் என்பதே நோக்கம். நீங்கள் தனியே கீழே கொடுத்திருந்தாலும், This file is lacking source information. என்று வருவதால், அப்பகுப்பினை இட விரும்பினேன். அப்பகுப்பினை மீண்டும் ஒருமுறை சீர்தூக்கி பார்க்கவேண்டும் என்பதே என் நிலைப்பாடு. ஏனெனில், பலகோப்பின் பெயர்கள் பொருத்தமானதாக இல்லை. கோப்பின் பெயரை தமிழிலும் எழுதலாம். பலரும் அங்கு இருந்து எடுத்துப் பயன்படுத்த இடைமொழியான ஆங்கில விளக்கம் இருப்பின் நன்றாக இருக்கும். அப்பகுப்பில் உள்ள அனைவருக்கும் அல்லது ஆலமரத்தடியில் ஒரு சுற்றறிக்கை செய்துவிடலாமா? அல்லது தேர்ந்தெடுத்த கோப்புகளை மட்டும் அங்கு பதிவேற்றம் செய்யலாமா? யாரும் சோதனையிட்டதாக தெரியவில்லை. ஆனால், அங்குள்ள உரிமத்தின் அடிப்படையில் பதிவேற்றலாம். காரணம் தவறாக இருந்திருந்தால் இங்கு இருப்பவர் ஏற்கனவே கவனித்திருப்பர் அல்லவா. ?--≈ உழவன் ( கூறுக ) 17:33, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]