உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:முழுமையாகக் கிடைக்காத தமிழ் நூல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள பிரபாகரன்! இந்தப் பகுப்புத் தலைப்பு வேண்டிய ஒன்றுதான். என்றாலும் தலைப்பின் பெயர் மாற்றப்படல் வேண்டும். 'முழுமையாகக் கிடைக்காத நூல்' என்னும் தொடர் 'கவர்படு பொருண்மொழி' அதாவது இரட்டைப் பொருள் தருவது. தாங்கள் கருதி இட்டது போல 'அரைகுறையாகக் கிடைக்கும் நூல்' என்றும், தாங்கள் கருதிப் பார்க்காத 'முற்றிலுமே அதாவது 'முற்றிலுமாக' கிடைக்காத நூல்' என்றும் பொருள் தர வல்லது. அன்றியும் 'புறநானூறு' போன்றவற்றிலும் சில பாடல்கள் கிடைக்கவில்லை எனபதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே தலைப்பு மாற்றப்பட வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 21:58, 7 மார்ச் 2013 (UTC)

எனவே பகுதியாகக் கிட்டிய நூல்கள் எனலாம். இது பதிற்றுப்பத்து நூலுக்கு மட்டும் பொருந்தும். ஏனைய திரட்டு நூல்களுக்குப் பொருந்தாது. எனவே திரட்டு நூல்கள் என்றும், திரட்டுப் பகுதி நூல்கள் என்றும் இரு பாகுபாடுகளை அமைத்துக்கொண்டு தொகுப்பது நலம் பயக்கும். --Sengai Podhuvan (பேச்சு) 22:14, 7 மார்ச் 2013 (UTC)

Start a discussion about பகுப்பு:முழுமையாகக் கிடைக்காத தமிழ் நூல்கள்

Start a discussion