பகுப்பு பேச்சு:பதிப்பகங்கள் வாரியாகத் தமிழ் நூல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனிப்பட்ட நிறுவனங்களின் பெயரிலான இந்தப் பகுப்பு அவசியம் தேவைதானா?--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:19, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

இப்பகுப்பு இருப்பது, விளம்பரங்களுக்கு வழிகோலும் என பெரும்பாலானோர் கருதினால்... இப்பகுப்பினை நீக்கிவிடலாம். ஆனால், கட்டுரை ஒன்று உருவாக்கப்பட்ட பின்னர்தானே இப்பகுப்புகள் இற்றை ஆகின்றன? அப்படிப் பார்த்தால்... கட்டுரைகளும் விளம்பரங்கள் என்று கருதப்படும் அல்லவா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:25, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
குறிப்பிட்ட பதிப்பகத்தின் நேரடியான விளம்பரப் பக்கமாக இருப்பது போல் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை நீக்கலாம். எதற்கும் மற்றவர்கள் கருத்தையும் அறியலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:33, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நிச்சியம் தேவை. பெரும்பான்மையான படைப்புக்கள் தனிப்பட்ட நிறுவனங்களிடம் இருந்தே கிடைக்கின்றன. அவற்றைக் கண்டடைய உதவும் வண்ணம் பகுப்புக்கள் உருவாக்குவது அவசியம். ஆங்கில விக்கியில் இவ்வாறே செய்துள்ளார்கள். எ.கா en:Category:Penguin Books books--Natkeeran (பேச்சு) 03:28, 7 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
en:Category:Books by publisher என்பதனையும் கவனியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:34, 7 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
தேனீ! நீங்கள் ஒரு படைப்பாளராக இருந்தும், விளம்பரம் என்று கூறுவது, எனக்கு வியப்பாக இருக்கிறது. மகவு ஈன்ற தாயின் மனநிலையும், படைப்பாளின் மனநிலையும் ஒன்றல்லவா? விளம்பரம் என்று கருத வேண்டாம். குடத்தில் இருக்கும் ஒரு விளக்கை, இங்கே இணையத்தில் வெளிப்படுத்துகிறோம். தவறாமல் இருக்க வேண்டும் என்றே நானும் எண்ணுகிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 03:36, 7 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
அனைவரது கருத்தையும் ஏற்கிறேன். தற்போது இந்தப் பகுப்பு தொடர்வதில் எனக்கு ஆட்சேபணையில்லை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:40, 7 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
தேனீ! உங்கள் படைப்புகளையும், உங்கள் நண்பர்களின் படைப்புகளையும் எண்ணிக்கையைக் கூட்ட, இங்கு ஆவணப்படுத்தக்கோருகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 03:51, 8 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]