பகிடிவதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பகிடிவதை அல்லது பகடிவதை (ragging, ரேகிங்க்) என்பது பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் உட, உள ரீதியாகப் புதிய மாணவர்கள் பழைய மாணவர்களால் துன்புறுத்தப்படுவதாகும். புதியவர்களை உள்வாங்குவதற்காகச் செய்யப்படுவது என்று கூறப்படும் இந்நடவடிக்கையால் புதியவர்கள் மோசமான பாதிப்புக்களை அடைவதுண்டு. இந்தப் பகடி வதை தொடக்கக் காலத்தில் புதியவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இருந்தாலும் காலப்போக்கில் இது வன்முறைச் செயல்களுக்கும் குற்றங்களுக்கும் வித்திட்டுள்ளது. பகிடிவதை பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மிகப் பரவியிருந்ததாகக் கூறப்படுகிறது.

பகிடிவதை பொதுவாக மூன்று வகைப்படுகிறது

  • பேச்சுரீதியான (உள) துன்புறுத்தல்
  • உடல்ரீதியான துன்புறுத்தல்
  • பாலியல் ரீதியான துன்புறுத்தல்

சில மாணவர்கள் தற்கொலை வரை செல்ல பகிடிவதையே காரணம் எனப்படுகிறது. உடல்ரீதியான துன்புறுத்தல் இறப்புக்கும் காரணமாவதுண்டு. இலங்கையில் வரப்பிரகாஷ் என்ற மாணவனின் மரணம் இத்தகையதொரு சம்பவமாகும். இந்தியாவில் நாவரசு கொலை வழக்கு பகடிவதையால் ஏற்பட்ட ஒரு கொலைச் சம்பவமாகும். இந்தியாவில் பகடி வதை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகிடிவதை&oldid=2803572" இருந்து மீள்விக்கப்பட்டது