ந. சேசகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ந. சேசகிரி
பிறப்புநரசிம்மையா சேசகிரி
(1940-05-10)10 மே 1940 [1]
இந்தியா
இறப்பு26 மே 2013(2013-05-26) (அகவை 73)
பெங்களூர், கருநாடகம், இந்தியா [2]
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பெங்களூர், இந்திய அறிவியல் நிறுவனம்
பணிகணினி விஞ்ஞானி
அறியப்படுவதுதேசியத் தகவல் மையம்
விருதுகள்பத்ம பூசண்

நரசிம்மையா சேசகிரி (N. Seshagiri-10 மே 1940-26 மே 2013) ஓர் இந்தியக் கணினி விஞ்ஞானியும், எழுத்தாளரும் மற்றும் தேசியத் தகவல் மையத்தின் முன்னாள் தலைமை இயக்குநரும் ஆவார். இந்திய அரசாங்கத்தின் ஓர் உச்ச அமைப்பான இது இந்தியாவின் மின்-ஆளுகை பயன்பாடுகளை கையாளுகிறது.[3][4][5] வருடம் 2000 சிக்கலை தீர்த்து வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் “ஒய்2கே” குழுவில் உறுப்பினராக இருந்தார்.[6] தி பாம்! ;ஃபால்அவுட் ஆஃப் இன்டியா`ஸ் மேஜர் நியூக்கிளியர் எக்ஸ்புளோசன்ஸ் ( இந்தியாவின் அணு வெடிப்பின் வீழ்ச்சி மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான தகவல் அமைப்புகள்) உட்படப் பல வெளியீடுகளை வெளியிட்ட பெருமை இவருக்கு உண்டு. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இவரது பங்களிப்புகளுக்காக 2005ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூசண் விருதை வழங்கியது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Remembering Dr. N. Seshagiri, India's ICT Evangelist and Founder Director General of National Informatics Centre".
  2. "N Seshagiri, NIC founder, dies at 73 | India News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  3. "ANALYSIS-India infotech sector above politics". India Network. 20 April 1999. பார்க்கப்பட்ட நாள் June 4, 2016.
  4. "10 from State figure in Padma awards list". தி இந்து. 26 January 2005. பார்க்கப்பட்ட நாள் June 4, 2016.
  5. "About Us". National Informatics Centre. 2016. பார்க்கப்பட்ட நாள் June 4, 2016.
  6. "Asia unharmed by Sept. 9 bug". Jawawa. 10 September 1999. பார்க்கப்பட்ட நாள் June 4, 2016.
  7. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் January 3, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._சேசகிரி&oldid=3916642" இலிருந்து மீள்விக்கப்பட்டது