உள்ளடக்கத்துக்குச் செல்

நோவாடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோவாடியம் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
வகைதனியார்
நிறுவுகைஆகஸ்ட் 13, 2004
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்ராஜேஷ் ஜெயின், MD, நெட் கோர் Solutions
ரே சாடா, தலைவர், Analog Devices Inc.
டாக்டர் அஷோக் ஜுன்ஜுன்வாலா, IIT மெட்ராஸ்
அலோக் சிங், CEO,
ஷிரிஷ் பி புரோஹித்,
கிருஷ்ணா "கிட்டு" கொள்ளுரி,
பென் மேதியாஸ்
தொழில்துறைநிர்வாக கணினி சேவை
பணியாளர்100+

நோவாடியம் [1] (Novatium) ஒரு நிர்வாக கணினி சேவை அளிக்கும் நிறுவனம். 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சென்னையை தலைமை இடமாக கொண்டு இந்தியா முழுவதும் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப முறை முற்றிலும் வித்தியாசமானது. இம் முறையின் மூலம் கணினி பயன்பாடு எளிதில் அமைய முடியும்.

நிறுவன வரலாறு

[தொகு]

பல இயங்குதளம் ஓர் திரை போல பல்வேறு சேவைகள் அளிக்கும் இந்நிறுவனம் 2004ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. விண்டோஸ், மாக்கின்டாஷ், லினக்ஸ் போன்ற இயக்குதளங்க்களை ஒரே கணினியில் வழங்கவல்ல இவர்கள் டாடா டெலி சர்வீஸஸ், பி.எஸ்.என்.எல், ஏர் டெல், ரிலையன்ஸ் போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. [2]

விருதுகள்

[தொகு]

சன் டெக்நோவேட் நோவாடியத்திற்கு "தி சன் டெக்நோவேட் இன்னோவேஷன்" (The Sun Technovate Innovation Award) என்ற விருதை 2007ஆம் ஆண்டு வழங்கியது.

"ரெட் ஹெர்ரிங் ஆசியா" (Red Herring Asia) 2007காண தலைசிறந்த 100 நிறுவனங்கள் பட்டியலில் நோவாடியமும் ஒன்றாக வந்தது.[3]

"டெல்லாஇட்டு டெக்னாலஜி" (Deloitte Technology) 2009ஆம் ஆண்டு வெளியிட்ட வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் நோவாடியம் 9வது இடத்தை பிடித்தது. அதன் அப்போதய வளர்ச்சி 446% சதவிகிதம் ஆகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://en.wikipedia.org/wiki/Novatium
  2. http://www.encyclopedia.com/doc/1G1-186025223.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-12-25. பார்க்கப்பட்ட நாள் 2010-02-02.
  4. http://business.rediff.com/slide-show/2009/nov/24/slide-show-1-tech-10-fastest-growing-tech-companies.htm#contentTop

இவற்றையும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவாடியம்&oldid=3561327" இலிருந்து மீள்விக்கப்பட்டது