நோதிர்பெக் யாகுபோவு
நோதிர்பெக் யாகுபோவு Nodirbek Yakubboev | |
---|---|
நாடு | உசுபெக்கிசுசுத்தான் |
பிறப்பு | 23 சனவரி 2002 |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2019) |
பிடே தரவுகோள் | 2630 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2667 (நவம்பர் 2022) |
உச்சத் தரவரிசை | No. 75 (நவம்பர் 2022) |
நோதிர்பெக் யாகுபோவு (Nodirbek Yakubboev) உசுபெக்கிசுத்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 2002 ஆம் ஆம் ஆண்டு சனவரி மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டு இவருக்கு கிராண்டுமாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சதுரங்க வாழ்க்கை
[தொகு]உசுபெக்கிசுத்தான் நாட்டு சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை நோதிர்பெக் யாகுபோவு மூன்று முறை வென்றுள்ளார். 2016,[1] 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நோதிர்பெக்கு இந்த வெற்றிகளை ஈட்டினார்.[2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற 3.4 மண்டல திறந்த நிலை வெற்றியாளர் போட்டியில் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றார்.[3][4]
2022 ஆம் ஆண்டில், உசுபெக்கித்தான் அணியுடன் சென்னையில் நடந்த 44வது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இவர் தங்கப் பதக்கத்தை வென்றார். இப்போட்டியில் நோதிர்பெக்கு 2ஆவது பலகையில் விளையாடினார். விளையாடினார். மேலும் இவர் தனிப்பட்டவராக வெண்கலப் பதக்கத்தையும் வென்றார், மொத்தமாக பதினொன்றுக்கு எட்டு புள்ளிகளைப் பெற்று 2,759 புள்ளிகள் என்ற செயல்திறன் மதிப்பீட்டைக் கொண்டிருந்தார்.[5]
குடும்பம்
[தொகு]உசுபெக்கித்தான் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் பெண்கள் பிரிவில் பலமுறை வென்ற நிலுபர் யாகுப்பேவா இவருடைய மூத்த சகோதரியாவார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Week in Chess 1115". theweekinchess.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
- ↑ 2.0 2.1 "Nodirbek and Nilufar Yakubboev are new champions of Uzbekistan". www.fide.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
- ↑ nikita. "GM Nodirbek Abdusattorov and GM Nodirbek Yakubboev qualify for the World Chess Cup 2021 – Chessdom" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
- ↑ "Nodirbek Abdusattorov wins Zone 3.4 Open Championship 2021". www.fide.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
- ↑ "Uzbekistan round results at the 44th Chess Olympiad". Chess-results.com. 14 August 2022. பார்க்கப்பட்ட நாள் 4 September 2022.
புற இணைப்புகள்
[தொகு]- நோதிர்பெக் யாகுபோவு rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு